அதிரடி 2 சதங்கள்.. குஜராத் அபார வெற்றி.. சிக்கலான சிஎஸ்கே-வின் பிளே ஆஃப் வாய்ப்பு.. மாறிய ஐபிஎல் கள நிலவரங்கள்

0
5421
IPL2024

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வென்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தார். குஜராத் அணிக்கு இந்த முறை சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி ஆரம்ப முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது.

- Advertisement -

இதன் காரணமாக பவர் பிளேவில் 50 ரன்கள் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி, 10 ஓவர்கள் எட்டுவதற்கு முன்னே 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதற்கு அடுத்து தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி 150 மற்றும் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே சதம் அடித்தார்கள். சாய் சுதர்ஷன் 51 பந்துகள் 5 பவுண்டரி 7 சிக்ஸர்கள் உடன் 103 ரன்கள், சுப்மன் கில் 55 பந்துகளில் 9 பவுண்டரி 6 சிக்ஸ்ர்களுடன் 104 ரன்கள் எடுத்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. டேவிட் மில்லர் 10 பந்தில் 15 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் குஜராத் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ரகானே 1(5), ரச்சின் ரவீந்தரா 1(2), கேப்டன் ருதுராஜ் 0(3) என சொற்ப ரன்னில் வரிசையாக வெளியேறினார்கள். இதற்கு அடுத்து டேரில் மிட்சல் 34 பந்தில் 63 ரன்கள், மொயின் அலி 36 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த ஜோடி 57 பந்தில் 109 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

இந்த நிலையில் கடைசி ஐந்து நபர்களுக்கு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 89 ரன்கள் தேவைப்பட்டது. இதற்கு அடுத்த சிஎஸ்கே அணிக்கு யாரும் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : சுப்மன் கில் சாய் சுதர்சன் அதிரடி சதங்கள்.. சிஎஸ்கேவுக்கு எதிரா 2 மாஸ் சாதனைகள்.. அகமதாபாத்தில் அதகளம்

இந்த வெற்றியின் மூலம் தற்பொழுது பிளே ஆப் வாய்ப்பில் குஜராத் அணி நீடிக்கிறது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணி அடுத்து ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் மற்ற எந்த அணிகளின் வெற்றி தோல்வியையும் சார்ந்து சிஎஸ்கே இருக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.