பும்ரா டி20 உலககோப்பை விளையாடனுமா?.. அப்ப உடனே இதை செய்யுங்க – மெக்ராத் எச்சரிக்கை

0
197
Bumrah

இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதுகுப் பகுதியில் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை மற்றும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இரண்டையும் தவறவிட்டார்.

இதற்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, ஐபிஎல் தொடர் முடிந்து அயர்லாந்து டி20 தொடருக்கு இந்திய அணிக்குள் திரும்ப வந்தார். பிறகு அங்கிருந்து அவர் ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

மேற்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட், மற்றும் உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு டெஸ்ட் போட்டி என தொடர்ந்து விளையாடி வருகிறார்.

பும்ராவுக்கு ஓய்வு அவசியம் ஏன்?

தற்பொழுது தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 14 லீக் போட்டிகளையும் விளையாடிய ஆக வேண்டிய வீரர்களில் பும்ரா மிக முக்கியமானவர். எனவே இந்தியாவின் கடுமையான கோடை காலத்தில் அவர் ஓய்வில்லாமல் விளையாட போகிறார். அடுத்து உடனே வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது. எனவே பும்ராவுக்கு இங்கு ஓய்வு என்பது மிக அவசியமாகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு கிளன் மெக்ராத் கூறும்பொழுது “பும்ரா கிரீஸ்க்குள் நுழைய இருக்கும் கடைசி இரண்டு அடிகளில் இருந்துதான், தன் முழு பலத்தையும் பயன்படுத்தி, தன்னுடைய முழு வேகத்தை கொண்டு வருகிறார். இந்த இடத்தில் அவருடைய உடல் அதிகப்படியாக செயல்படுகிறது. எனவே அவரைப் போன்ற ஒரு பந்துவீச்சாளருக்கு நிச்சயம் ஓய்வு தேவை.

- Advertisement -

ஏனென்றால் பும்ரா ஒவ்வொரு பந்துக்கும் தன்னுடைய உழைப்பை கொடுக்கிறார். மேலும் ஒவ்வொரு பந்திலும் அதிகம் முயற்சி செய்கிறார். அவருக்கு கட்டாயம் ஓய்வு தேவை. அவர் ஓய்வில்லாமல் விளையாடினால் நிச்சயம் காயம் அடைவார். காரணம் பந்துவீச்சு நடவடிக்கையால் அவர் உடலுக்கு அதிகப்படியான அழுத்தம் உண்டாகிறது. இது கட்டாயம் காயத்தை கொண்டு வரும்.

இதையும் படிங்க : CSK vs RCB.. மழை வாய்ப்பு மற்றும் ஆடுகளம் எப்படி இருக்கும்?.. மைதான மொத்த புள்ளி விபரம்

இந்திய வேகப்பந்துவீச்சுத்துறை நீண்ட காலத்திற்கு வலது கை வேகப்பந்துவீச்சாளர்களால் சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது கூட ஆவேஸ் கான் போன்ற வலதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்தியாவிற்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேவை உருவாகவில்லை” என்று கூறி இருக்கிறார்