CSK vs RCB.. மழை வாய்ப்பு மற்றும் ஆடுகளம் எப்படி இருக்கும்?.. மைதான மொத்த புள்ளி விபரம்

0
331
IPL

2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசன் இன்னும் இரண்டு நாட்கள் இடைவெளியில் நடக்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன.

இந்த நிலையில் இன்று இரவு தனி விமானம் மூலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் முதல் போட்டி விளையாடுவதற்காக சென்னை வந்தடைகிறார்கள். மேற்கொண்டு நாளை அவர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வார்கள்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறுகின்ற காரணத்தினால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் பயிற்சியில் இருக்கிறார்கள். இரு அணிகளுமே ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மற்றும் தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்கு மிகத் தீவிரமாக இருக்கின்றன.

சென்னை வானிலை :

தற்போது கோடைக்காலம் என்பதால் பொதுவாக பகலில் கடும் வெயிலும், மேலும் கடலை ஒட்டி இருக்கின்ற காரணத்தினால் இரவில் காற்றில் ஈரப்பதமும் மிக அதிகமாக இருக்கும். சென்னையின் அடுத்த 15 நாட்கள் வானிலையை எடுத்துக் கொண்டால் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை உயரும். மழை வாய்ப்பு கிடையாது.

- Advertisement -

சென்னை ஆடுகளம் :

மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளத்தை பொறுத்தவரையில் மெதுவானதாகவும், சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் இருக்கும். முதல் இரண்டு போட்டிகளுக்குள் ஆடுகளம் புதிதாக இருக்கின்ற காரணத்தினால், ஹை ஸ்கோரிங் போட்டியாக நடைபெறவும் வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் இரு அணிகளுமே சுழற் பந்து வீச்சுக்கான வீரர்களை அணியில் கூடுதலாகவே வைக்க வாய்ப்பு உண்டு.

சென்னை சேப்பாக்கம் மைதான புள்ளி விபரங்கள் :

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 76 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 46 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 30 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ரன்னாக பதிவாகி இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 70 ரன்கள் எடுத்து சுருண்டது குறைந்தபட்ச ஸ்கோராக பதிவாகி இருக்கிறது.

இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோராக 201 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸ் செய்து வெற்றி பெற்று இருக்கிறது. 128 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக குறைந்த ரன்னில் டிபென்ஸ் செய்திருக்கிறது.

இதையும் படிங்க : ஒவ்வொரு வருஷமும் வெட்கமா இருக்கு.. இனி அப்படி கூப்பிடாதிங்க – விராட் கோலி ரசிகர்களுக்கு ரிக்வெஸ்ட்

இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோராக 163, இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோராக 150 ரன்கள் இருக்கிறது. பொதுவாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்குமே சராசரியான ஒத்துழைப்புதான் இருக்கும். எனவே போட்டிகள் மிகவும் சவால் ஆனதாகவும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியமானதாகவும் அமையும்!