விராட் கோலிக்கு வயச ஞாபகப்படுத்தனும்.. அவரை எங்களால மைதானத்துல சமாளிக்க முடியல – மேக்ஸ்வெல் பேச்சு

0
1028
Virat

இந்தியாவில் 17வது ஐ பி எல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி, 4-1 என அந்தத் தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரில் முழுமையாக விராட் கோலி தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக விளையாடவில்லை.

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி அணிக்கு திரும்பிய அவர், நான்கு போட்டிகளில் விளையாடி 67.66 ஆவரேஜ் உடன், 203 ரன்கள் எடுத்து தற்பொழுது அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருக்கிறார். ஆர்சிபி அணியில் ஒரே நல்ல விஷயமாக விராட் கோலி பேட்டிங் பார்மில் இருப்பது மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

35 வயதான விராட் கோலி ஒட்டுமொத்தமாக இதுவரையிலான 17 ஐபிஎல் சீசன்களில் ஆர்சிபி அணிக்காக 241 போட்டிகளில் விளையாடி, 7 சதங்கள் மற்றும் 52 அரைசதங்களுடன் 7,466 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராட் கோலியே இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அந்த நேரத்தில் ரன் குவிப்பதற்காக பேட்டிங் அணுகு முறையில் நிறைய மாற்றங்களை செய்தும் எடுபடவில்லை. பிறகு ஒரு சிறிய ஓய்வில் சென்று வந்த அவர் பழையபடி விளையாட ஆரம்பித்தார். ஆனால் அதற்குப் பிறகு ஒவ்வொரு போட்டியையும் மிகவும் மகிழ்ச்சியாக அணுக ஆரம்பித்தார். களத்தில் மிக அதிகமாக ஏதாவது குறும்புத்தனங்கள் செய்வது என இருந்து வருகிறார்.

இது மைதானத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல், சொந்த அணியின் வீரர்களையும் மிகவும் உற்சாகப்படுத்துகிறது. குறிப்பாக இந்திய அணியில் விராட் கோலி கில் போன்ற இளம் வீரர்களுடன் மிகவும் நெருக்கமாக களத்தில் நட்பு பாராட்டுகிறார். இது அப்படியே ஆர்சிபி அணியிலும் தொடர்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சுனில் நரைன் பிரைன் லாராவை பெருமைப்படுத்தி இருக்காரு.. ஆனா சின்ன வயசுல கதையே வேற – இயான் மோர்கன் பேச்சு

இதுகுறித்து ஆர்சிபி அணியின் சக வீரர் மேக்ஸ்வெல் கூறும் பொழுது “அவர் ஆர்சிபி அணிக்கு சக ஆர்சிபி வீரர்களுடன் இணைந்து வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் மிகவும் நன்றாக விளையாடுகிறார், மைதானத்தில் நன்றாக ஓடுகிறார். அவர் மைதானத்தின் சுற்றிலும் ஓடி குதித்துக் கொண்டிருப்பதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. அவர் மைதானத்தில் செய்யும் சேட்டைகளின் காரணமாக, அவருக்கு வயது ஆகிவிட்டது என்பதை நான் நினைவு படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று நகைச்சுவையாகக் கூறி இருக்கிறார்.