சுனில் நரைன் பிரைன் லாராவை பெருமைப்படுத்தி இருக்காரு.. ஆனா சின்ன வயசுல கதையே வேற – இயான் மோர்கன் பேச்சு

0
19
Narine

நடப்பு ஐபிஎல் தொடருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் மீண்டும் மென்டராக திரும்பினார். இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரராக சுனில் நரைனும் திரும்பி இருக்கிறார். கம்பீரின் இந்த முடிவு அந்த அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் டாஸ் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக பேட்டிக் செய்தது. இதில் துவக்க ஆட்டக்காரராக வந்த சுனில் நரைன் அதிரடியாக 39 பந்துகளில் தலா 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 85 ரன்கள் குவித்து அதிரடியான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

- Advertisement -

இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 272 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தியது. மேலும் பந்துவீச்சில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 166 ரன்களுக்கு சுருட்டி, 106 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மேலும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று பெரிய ரன் ரேட் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறது.

சுனில் நரேன் பேட்டிங் குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் கூறும்பொழுது “அவர் பேட்டிங்கை எவ்வளவு ரசிக்கிறார் என்பதை பார்ப்பது மிகவும் முக்கியம். ஆனால் அவருடைய சிறுவயதில் அவர் ஒரு பேட்ஸ்மேனாகத்தான் தொடங்கினார். பின்பு அப்படியே வேகப்பந்துவீச்சுக்கு போனார். பிறகு சுழல் பந்துவீச்சாளராக சில மந்திர பந்துகளில் வேலை செய்து உருவானார். தற்பொழுது மீண்டும் பேட்டிங்க்கு திரும்ப வந்து அதை ரசிக்கிறார்.

சுனில் நரைன் வளர்ந்து வந்த பொழுது, அவருடைய ஹீரோ பிரையன் லாரா. இன்று அவர் விளையாடிய சில ஆட்களை பார்த்து பிரைன் லாரா பெருமைப்பட்டு இருப்பார். அவர் மிகவும் நேர்த்தியாக பேட்டிங் செய்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி இத மட்டும் செய்யுங்க.. ஆர்சிபி வேற லெவல் டீமா மாறிடும் – ஏபி.டிவில்லியர்ஸ் அட்வைஸ்

சுனில் நரைன் பேட்டிங் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது “கேகேஆர் பேட்டிங் யூனிட் மிகவும் நீளமானது. இதன் காரணமாக சுனில் நரைனை ஓபனராக வைத்து ரிஸ்க் எடுப்பது மிகவும் புத்திசாலித்தனமான ஒன்று. அவர் அதிரடியாக விளையாடினாலும் கூட, பேட்டிங்கில் ஷாட்கள் மிக சுத்தமாக இருந்தது. அதே சமயத்தில் அவரிடம் இருந்து இப்படி எப்பொழுதும் வரப்போவதில்லை. இதை அவர்கள் ஒரு மகிழ்ச்சியாக செய்கிறார்கள். மேலும் இந்த ஐபிஎல் தொடர் முழுக்க இதை கேகேஆர் அணி செய்யும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.