என்னை டீம்ல எடுக்காதீங்க.. போன மேட்ச் முடிஞ்சதுமே அவங்ககிட்ட சொல்லிட்டேன் – மேக்ஸ்வெல் அதிரடி பேட்டி

0
1320

பெங்களூர் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் கடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை. முன்னதாக அதற்கு முன்னர் விளையாடிய 6 போட்டிகளில் மூன்று முறை டக் அவுட் ஆகி வெளியேறினார் . இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்த பிறகு தான் விளையாடாத காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கும் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த மேக்ஸ்வெல், இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி வெறும் 32 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதில் மூன்று போட்டிகளில் டக் அவுட்டாகி மிகவும் ஏமாற்றம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

பந்து வீச்சில் மிகவும் பலவீனமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த சீசனில் பெரும்பாலும் பேட்டிங்கை நம்பி களமிறங்கியது. ஆனால் இந்த முறை எதுவுமே பெங்களூர் அணிக்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.

மேடம் பெங்களூர் அணியில் விராட் கோலி, டு பிளஸ்சிஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் குறிப்பிடப்படும் படியான பங்களிப்பை வழங்கவில்லை. பந்துவீச்சும் அந்த அணிக்கு சரியாக கிளிக் ஆகாததால் இன்னும் பெங்களூர் அணியால் வெற்றி பாதைக்கு திரும்பவே முடியவில்லை.

கிளென் மேக்ஸ்வெல் பேட்டி

இந்நிலையில் கடந்த சீசன்களில் சிறப்பாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தன்னை விடுவிக்குமாறும் தனக்கு உடல் மற்றும் மனரீதியாக ஓய்வு தேவை என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இந்த ஓய்வு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் எளிதான முடிவாகும். எங்களது கடைசி ஆட்டத்திற்கு பிறகு நான் அணியின் கேப்டன் பாப் டு பிளஸ்சிஸ் மற்றும் பயிற்சியாளரிடம் சென்று இது குறித்து விவாதித்தேன். மிடில் ஆர்டரில் வேறு யாரையாவது முயற்சிக்க வேண்டிய சரியான நேரம் இது என்று உணர்ந்தேன்.

- Advertisement -

கடந்த காலத்தில் நான் இதே மாதிரியான சூழ்நிலையில் இருந்திருக்கிறேன். எனவே கடந்த காலத் தவறுகளை மீண்டும் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு மனது மற்றும் உடல் ரீதியாக சிறிது ஓய்வு கொடுக்க, எனது உடலை சரி செய்வதற்கு இது ஒரு நல்ல நேரம் என்று நான் நினைக்கிறேன். போட்டியில் நான் விளையாட விரும்பினால் உண்மையிலேயே நான் திடமான மனநிலையில் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க:உறுதியா தெரியும் தோனிக்கு காயம் இருக்குன்னு.. ஆனா அவர்கிட்ட அந்த திறன் இருக்கு – சிஎஸ்கே கோச் எரிக் சிம்மன்ஸ்

கடந்த இரண்டு சீசன்களில் பவர் பிளேவிற்கு பிறகு ஏற்பட்ட குறையை எனது பேட்டிங்கின் மூலம் சரி செய்ய முடிந்தது. ஆனால் தற்போது என்னால் பேட்டிங்கில் நேர்மையான பங்களிப்பை வழங்க முடியாததால், அது அணியின் ரிசல்ட் மற்றும் புள்ளி பட்டியலில் எங்களது இடத்தையும் பாதிக்கிறது. எனவே வேறு ஒருவர் அவரது திறமையை காட்ட இது ஒரு நல்ல நேரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் எனது பேட்டிங் ஆர்டரில் வேறு ஒருவர் விளையாடி அதை அவருக்கு சொந்தமாகி கொள்ள முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.