உறுதியா தெரியும் தோனிக்கு காயம் இருக்குன்னு.. ஆனா அவர்கிட்ட அந்த திறன் இருக்கு – சிஎஸ்கே கோச் எரிக் சிம்மன்ஸ்

0
407

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த சீசனில் கலக்கிக் கொண்டிருக்கும் மகேந்திர சிங் தோனி நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு பந்துகளில் 20 ரன்களை குவித்தார். அதில் மூன்று ஹாரட்ரிக் சிக்ஸர்களும் அடங்கும்.

இந்த நிலையில் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் தோனி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று சற்று வருத்தத்திற்குரிய தகவலை சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2023ஆம் ஆண்டு சீசனில் விளையாடிய மகேந்திர சிங் தோனி முழங்காலில் ஏற்பட்ட காயத்துடனே அந்த சீசன் முழுவதிலும் விளையாடினார். தற்போது அந்த சீசன் முடிந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து மீண்டும் சென்னை அணிக்காக களம் இறங்கி தற்போது கடந்த சீசனை விட சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

கடந்த சீசனை விட இந்த சீசன் மகேந்திர சிங் தோனிக்கு சிறப்பாக அமைந்து கொண்டிருக்கிறது. டெல்லிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்த அவர், கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்து இருக்கிறார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிட்டு அவர் தனது காலில் ஐஸ் பேக் பொருத்தப்பட்டிருந்த வீடியோ வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் மகேந்திர சிங் டோனி தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறியிருக்கிறார். இது குறித்த அவர் மேலும் கூறும்பொழுது
“எல்லோரும் மகேந்திர சிங் தோனியை விட அவரது காயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நான் சதித்த கடினமான மனிதர்களில் மகேந்திர சிங் தோனியும் ஒருவர்.

- Advertisement -

தோனி தனது வலியை எந்த அளவிற்கு அனுபவிக்கலாம் அல்லது அனுபவிக்காமல் இருக்கலாம் என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் அவர் அவரது காரியத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அதனை புறக்கணித்து சிறப்பாக செயல்படும் திறன் அவரிடம் மட்டுமே உள்ளது.

அவருடைய காயங்கள் பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம். ஆனால் பொதுமக்கள் அவரைவிட அவரது காயங்கள் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலிலும் மூன்றாவது இடத்தில் சென்னை அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.