இந்த ஐபிஎல்ல.. பெஸ்ட் கேப்டன் இந்த பையன்தான்.. பதட்டப்பட்டு பார்க்கவே இல்ல – ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டு

0
2776
ABD

நடப்பு ஐபிஎல் தொடர் லீக் சுற்று முடிவில் இருக்கிறது. தற்போது கொல்கத்தா ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கின்றன. இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பில் பதட்டமில்லாமல் சிறப்பாக செயல்பட்ட ஒரு இளம் இந்திய கேப்டனை ஏபி டி விலியர்ஸ் பாராட்டி இருக்கிறார்.

2024, 17வது ஐபிஎல் சீசனில் வெளிநாட்டு கேப்டனாக பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். மேலும் எதிர்பார்ப்பை விட மிக அதிகமாக செயல்பட்டு தன்னுடைய அணியை பிளே ஆப் சுற்றுக்கும் கொண்டு வந்திருக்கிறார். ஆர்சிபி அணிக்கு பாப் டு பிளேசிஸ்வெளிநாட்டு கேப்டனாக இருக்கிறார்.

- Advertisement -

மீதமுள்ள அணிகளின் கேப்டன்கள் இந்திய வீரர்களாகவே இருந்து வருகிறார்கள். குறிப்பாக இளம் வீரர்களாக இருக்கிறார்கள். இதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் வயதில் மூத்த கேப்டனாக இருந்தார். ஆனால் அவர் காயமடைந்த காரணத்தினால் வெளிநாட்டு வீரரான சாம் கரன் கேப்டன்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீதம் இருக்கும் 7 அணிகளின் கேப்டன்களும் இளம் இந்திய வீரர்களாக தொடர்கிறார்கள். தற்போதைக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதில் கொல்கத்தா அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் இந்திய கேப்டன்களாக இருக்கிறார்கள். இதில் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவராக தற்போதைய கேப்டன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஏபி டி விலியர்ஸ் கூறும்பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பில் முற்றிலும் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்திருக்கிறார். அவர் மீது ஆரம்பத்தில் நிறைய சந்தேகங்கள் இருந்தது. நானும் அவர் குறித்து சந்தேகப் பார்வையில் இருந்தேன். ஆனால்அவர் ஒரு புத்திசாலி கேப்டன். அவரின் அமைதியான நடவடிக்கையை நான் விரும்புகிறேன். கேப்டன் பொறுப்பில், குறிப்பாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பீதி அடையாமல் இருப்பது பெரிய விஷயம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா வேற லெவல் டீம்.. ஆனா ஆஸிக்கு இருக்கும் இந்த வசதி கிடையாது.. அதான் தோக்கறாங்க – மிஸ்பா உல் ஹக் பேட்டி

மேலும் வயதில் மூத்த கரீபியன் வீரர்களான நரைன் மற்றும் ரசலுக்கு கேப்டனாக இருப்பது எளிதான விஷயம் கிடையாது. அவர்கள் எது ஒன்றையும் வெளிப்படையாக பேசக்கூடிய கலாச்சாரத்தை கொண்டு இருப்பவர்கள். இப்படி வித்தியாசமான கலாச்சாரத்தை கொண்ட வயதில் மூத்த வீரர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்துவது கடினம். ஆனால் இதையும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செய்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.