தோனி மாதிரி ஒருத்தர் இனி வர முடியாது.. அவர்கிட்ட நான் பயப்பட்ட விஷயம் இதுதான் – கம்பீர் மனம் திறந்த பேட்டி

0
1126
Dhoni

இந்திய அணிக்காக ஒரே காலகட்டத்தில் விளையாடிய தோனி மற்றும் கம்பீர் இன்று ஐபிஎல் தொடரில் எதிரெதிர் அணிகளில் இருந்து சந்திக்க இருக்கிறார்கள். இதில் ஒரு வித்தியாசமாக தோனி சிஎஸ்கே அணியின் வீரராக இருக்க, கம்பீர் கேகேஆர் அணியின் மென்டராக இருக்கிறார். இந்த நிலையில் தோனி குறித்து கம்பீர் மனம் திறந்து நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

பொதுவாக தோனி பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லாதவராகவே கம்பீரை எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உலகக் கோப்பையை தனி நபர் வெல்லவில்லை அணியே வென்றது என்கின்ற அவருடைய கருத்துக்கள் இப்படி புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அவர் எல்லா நேரத்திலும் இதை வெளிப்படுத்தக்கூடியவராகவே இருந்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் 2012 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. அதற்கு முன்பாக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்று இருந்தது. மேலும் சொந்த மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்கின்ற காரணத்தினால் ஹாட்ரிக் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணி வென்று கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது. கேகேஆர் அணியின் மிகச்சிறந்த வெற்றிகளில் முதலிடம் இந்த போட்டிக்குதான் இருக்கும். இதே போல ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களில் கம்பீருக்கு என ஒரு தனி இடமும் இருக்கிறது.

இன்று இரு அணிகளும் மோதிக்கொள்ள இருக்கும் நிலையில் தோனியுடன் நட்பு பற்றி பேசி உள்ள கம்பீர் ” நான் எப்பவும் ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டேன். நான் என்னுடைய மனநிலையில் தெளிவாக இருந்தேன். அவருடன் எனக்கு நட்பு இருக்கிறது, பரஸ்பர மரியாதை எல்லாம் இருக்கிறது. ஆனால் நீங்கள் இதையெல்லாம் தள்ளி விட்டு பார்க்கும் பொழுது நான் கேகேஆர் அணியின் கேப்டன். நான் வெற்றியைத்தான் விரும்ப முடியும். நீங்கள் தோனியிடம் கேட்டாலும் இதே பதிலை தான் கூறுவார். தோனி இந்தியாவுக்கு கிடைத்த மிக வெற்றிகரமான கேப்டன். அவரைப்போல மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்லக்கூடிய இன்னொரு கேப்டன் இந்தியாவுக்கு கிடைப்பார் என்று நான் நினைக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கும் குல்தீப் யாதவுக்கும் பிரச்சனையானது இதனால்தான்.. நான் வேணும்னே செய்யல – தினேஷ் கார்த்திக் பேட்டி

நான் தோனியின் கேப்டன்சி திறமைகளை எப்பொழுதும் ஐபிஎல் தொடர் முழுவதுமாக ரசித்தேன். அவர் சுழற் கொண்டு வீச்சாளர்களை வழிநடத்துவதிலும், அவர்களுக்கு ஃபீல்டு செட் அப் செய்து தருவதிலும் மிகவும் திறமையானவர். இதேபோல தோனி பேட்டிங்கில் இருந்தால் அவரால் எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தை முடிக்க முடியும் என்று எனக்குத் தெரியும். அவர் சிறந்த பினிஷர்” என்று கூறியிருக்கிறார்.