எனக்கும் குல்தீப் யாதவுக்கும் பிரச்சனையானது இதனால்தான்.. நான் வேணும்னே செய்யல – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
593
Kuldeep

ஐபிஎல் வரலாற்றில் தினேஷ் கார்த்திக் இதுவரை மொத்தம் ஆறு அணிகளுக்கு விளையாடி இருக்கிறார். இதில் 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் அந்தக் காலகட்டத்தில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் நிர்வகித்து வந்தார். அப்போது சக இந்திய வீரர் குல்தீப் யாதவுடன் அவருக்கு சில மனக்கசப்புகள் இருந்தன. அது குறித்து தற்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் குல்தீப் யாதவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. மேலும் அப்போது குல்தீப் யாதவ் பவுலிங் பார்ம் பாதிக்கப்பட்டு, அவர் இந்திய அணியிலும் இடம் பெறவில்லை. இந்த நேரத்தில் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு ஐபிஎல் தொடரில் அவருக்கு கிடைக்காதது, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய பின்னடைவை உருவாக்கியது.

- Advertisement -

இதன் காரணமாக குல்தீப் யாதவ் பயிற்சியாளர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தை மிகக் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருந்தார். அதே சமயத்தில் அவரை 2022 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணி நிர்வாகம் வாங்கியது குறித்து மிகவும் மகிழ்ச்சியும் தெரிவித்து இருந்தார். தற்பொழுது குல்தீப் யாதவ் மிகச் சிறப்பான முறையில் திரும்பி வந்து இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில் அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் “பிரான்சிசைஸ் டி20 அணியை வழிநடத்துவது முற்றிலும் வேறு மாதிரியானது. வெளியில் இருந்து வரும் பலருடனும் அங்கு பழகுவது மிகவும் கடினம். அவர்களுடன் நீங்கள் நேர்மையாக இருந்தாக வேண்டும். நட்புகளையும் இழக்க வேண்டியதாக வரும். நான் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த பொழுது குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படவில்லை. அவருடன் எனக்கு கடுமையான உரையாடல்கள் இருந்தன. நான் அவருடன் கடுமையாக இருந்தேன் என்று நினைக்கிறேன். நிச்சயம் அதை குல்திப் யாதவ் பாராட்ட மாட்டார்.

அவர் இன்று இருக்கும் இடத்திற்கு நான் மிகவும் சந்தோசப்படுகிறேன். ஆனால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் சிறந்த உலகத்தரமான பந்துவீச்சாளராக மாறிவிட்டார். ஆனால் கேகேஆர் அணியில் அவர் விளையாடிய காலகட்டத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிக்க சாதகமாக இருந்தது. எனவே அங்கு ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய அவசியம் இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க: ரிக்கி பாண்டிங் புது ப்ளான்.. ஹாரி புரூக் இடத்துக்கு.. ஆல் இன் ஆல் பாஸ்ட் பவுலரை தூக்கி இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ்

குல்தீப் யாதவுக்கு கடினமான காலகட்டங்கள் அமைந்திருந்தன. அந்த நேரங்கள்தான் அவரை தற்பொழுது சிறந்த பந்துவீச்சாளராக மாற்றி இருக்கிறது என்று நினைக்கிறேன். எனது துரதிஷ்டம் என்னவென்றால் அவருடைய மோசமான காலத்தில் நானும் ஒரு பங்காக இருந்திருக்கிறேன் என்பதுதான். நான் என்ன செய்தேன் என்பதை அவர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன். அவர் என்னை பாராட்ட வேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. நான் அணிக்காக முடிவுகளை எடுத்தேன் தனிப்பட்ட முறையில் எதுவும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.