நேர்மையா சொல்றேன்.. தோனியின் இந்த அணுகுமுறையில் எனக்கு நம்பிக்கை கிடையாது – கவுதம் கம்பீர் பேச்சு

0
228
Gambhir

உலக கிரிக்கெட்டில் தோனி கொண்டு வந்த ஒரு அணுகுமுறை முக்கியமான மந்திரமாகவே மாறியது. தோனி எப்பொழுதும் ரிசல்ட்டை பற்றி கவலைப்படாமல், என்ன செய்ய வேண்டுமோ அந்த செயல்முறையில் சரியாக இருக்க வேண்டும் என கூறுவார். சிஎஸ்கே அணி இதுவரையில் இதில் தான் கவனம் செலுத்தி வந்திருக்கிறது. தற்பொழுது கம்பீர் தன்னுடைய அணுகுமுறை குறித்து பேசி இருக்கிறார்.

தோனி இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிகளை வழிநடத்தும் பொழுது பிராசஸில் கவனம் செலுத்த வேண்டும், ரிசல்ட் பற்றி கவலைப்படக் கூடாது என்ற கொள்கையை வைத்திருந்தார். அவர்கள் பிராசஸில் கவனம் செலுத்தியதால் அவர்களுடைய வெற்றி சதவீதம் அதிகமாகவே இருந்திருக்கிறது. ரிசல்ட் பற்றி கவலைப்படாத அணுகுமுறையால் அவர்களுடைய வெற்றி சதவீதம் பாதிக்கப்படவில்லை என்பது முக்கியம்.

- Advertisement -

எனவே தோனிக்கு பிறகு அவருடைய இந்த வழிமுறையை வீரர்கள் தங்களுடைய தனிப்பட்ட ஆட்டத்திற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். செய்யும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி, வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லாமல் செயலாற்றினார்கள். இது அவர்களுக்கு பலன் தரவும் செய்தது.

இந்த நிலையில் கம்பீர் இதற்கு எதிர் அணுகு முறையை பின்பற்றக் கூடியவராக இருக்கிறார். அவர் தனக்கு முடிவுகள் மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார். மேலும் அவர் தற்பொழுது மென்டராக கேகேஆர் அணிக்கு ஒரு நல்ல மாற்றத்தையும் கொண்டு வந்திருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணி ஆறு போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளை வென்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “எனக்கு ரிசல்ட் மிகவும் முக்கியம் என்பதை நான் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறேன். பிராசஸில் கவனம் செலுத்துங்கள் முடிவுகள் தாமாகவே கிடைக்கும் என்கின்ற வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என்னைப் பொறுத்த வரையில் முடிவுகள்தான் முக்கியம். ஏனென்றால் மக்கள் கேகேஆர் அணி வெல்வதை பார்ப்பதற்குதான் வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே அணியை விட்டு விலகியது எதனால்?.. அணியில் நடந்த பிரச்சனைகள் என்ன – சுரேஷ் ரெய்னா விளக்கம்

நாடு முழுவதும் கேகேஆர் அணிக்கு விசுவாசமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மிக நேர்மையாக என் இதயத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்து கூறுகிறேன். காரணம் முதல் மூன்று ஆண்டுகள் எங்கள் அணிக்கு சரியாக அமையவில்லை. எங்கள் அணி கடினமான சூழ்நிலையில் இருந்த பொழுது கூட ரசிகர்கள் எங்கள் அணியுடன் தொடர்ந்து ஒட்டிக்கொண்ட விதம் அவர்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.