சிஎஸ்கே அணியை விட்டு விலகியது எதனால்?.. அணியில் நடந்த பிரச்சனைகள் என்ன – சுரேஷ் ரெய்னா விளக்கம்

0
768
Raina

சிஎஸ்கே அணியின் அடையாள வீரர்களாக சிலர் இருக்கிறார்கள். அதில் தோனிக்கு நிகராக மிக முக்கியமானவராக இருப்பவர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே ரசிகர்கள் இன்று வரையில் இவரை சின்ன தல என்று அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு சிஎஸ்கே அணிக்கு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக விளையாடியிருக்கிறார். சிஎஸ்கே அணியை விட்டு 2020 ஆம் ஆண்டு விலகியது ஏன் என தற்போது கூறி இருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் மகேந்திர சிங் தோனியை சிஎஸ்கே அணி வாங்கியது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு சுரேஷ் ரெய்னாவை வாங்கியதும் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்திருக்கிறது. பேட்ஸ்மேனாக, பந்துவீச்சாளராக, ஃபீல்டராக சிஎஸ்கே அணிக்கு அவருடைய தாக்கம் இல்லாத போட்டி மிகவும் அரிதானது.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் தோனிக்கு அடுத்து மதிக்கப்படக்கூடிய நபராக இருந்த சுரேஷ் ரெய்னா 2020 ஆம் ஆண்டு யுஏஇல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென அணியை விட்டு விலகினார். அதே ஐபிஎல் சீசனில் ஹர்பஜன் சிங்கும் விலகினார். அந்த நேரத்தில் சிஎஸ்கே அணிக்கு ஆப் ஸ்பின் பவுலிங் ஆப்ஷன் மற்றும் மூன்றாம் இடத்தில் பேட்ஸ்மேன் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது முதல் முறையாக அந்த வருடம்தான் நடந்தது. இதன் காரணமாக சுரேஷ் ரெய்னா அணி நிர்வாகத்துடன் முரண்பட்டு வெளியேறினார் எனவும், இதன் காரணமாகவே அவர் சிஎஸ்கே அணியில் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் தக்கவைக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.

மேலும் சிஎஸ்கே அணி மேட்ச் தொடர்பான சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக இரண்டு வருடங்கள் தடை செய்யப்பட்டது. அணியை ஒட்டி வெளியில் இருப்பவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு, சிஎஸ்கே அணி தடைசெய்யப்பட்டது ஏன் என்று புரியவில்லை என தோனி வரை இன்றும் பலர் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி ருதுராஜ் இல்லை.. சிஎஸ்கே வை கஷ்டமான நேரத்தில் காப்பாற்றும் ஒரே வீரர் இவர்தான் – அம்பதி ராயுடு பேச்சு

இதுவெல்லாம் குறித்து பேசி இருக்கும் சுரேஷ் ரெய்னா கூறும் பொழுது “அந்த வருட ஐபிஎல் தொடரின் போது எனது குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்பட்டது. இதன் காரணமாக நான் பஞ்சாபுக்கு சென்றேன். இதுகுறித்து நான் தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் இருவரிடமும் தெரிவித்து இருந்தேன். அந்த நேரத்தில் இதுதான் நடந்தது. அணி சூதாட்ட விவகாரத்தில் தடை செய்யப்பட்டது குறித்து எங்களுக்கு எந்த க்ளுவும் இல்லை. பிசிசிஐயின் ஊழல் எதிர்ப்பு குழு மிகவும் கண்டிப்பானது. வீரர்கள் அப்படி செய்திருந்தால் கட்டாயம் சிறைக்கு செல்ல வேண்டி இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.