ஹர்திக்கை யாரும் திட்டாதிங்க.. முடிவெடுத்தது அவர் இல்ல – மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் போட்டிக்கு முன் கங்குலி பேச்சு

0
423
Hardik

நாளை ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி மதியம் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியின் போது ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கூச்சல் போட வேண்டாம் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மென்டர் கங்குலி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடருக்கு டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியாவை வாங்கியதோடு, தங்கள் அணியின் மிக வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக கொண்டு வந்தது தற்போது வரை பிரச்சனைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளையும் மும்பை இந்தியன்ஸ் அணி இழந்து இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டம் மிகவும் சுமாராக இருப்பது தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியும் கொஞ்சம் சரியில்லாமல் இருந்து வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளை குஜராத் மற்றும் ஹைதராபாத் மைதானங்களில் விளையாடி மும்பை அணி தோற்று இருந்தது. வெளி மைதானத்தில் விளையாடிய பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டது ஒரு அளவுக்கு எதிர்பார்த்த ஒன்றாக இருந்தது.

அதே சமயத்தில் மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சொந்த மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடிய பொழுதும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் கடுமையான கூச்சலை எழுப்பினார்கள். டாஸ் நிகழ்வின்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேட்டுக் கொண்டும் ரசிகர்கள் கூச்சல் போடுவதை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே தோத்தது ஜடேஜாவை வச்சு எடுத்த இந்த முடிவால்தான்.. மொயின் அலி எதுக்கு இருக்காரு? – மேத்யூ ஹைடன் விமர்சனம்

இந்த நிலையில் நாளை டெல்லி மும்பை அணி மோதல் குறித்து பேசிய கங்குலி கூறும் பொழுது “ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை திட்டுவது சரியல்ல. ரோகித் வேறு வகையான தரமானவர். தற்பொழுது அவர் ஆட்டம் வேறு லெவலில் இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக கொண்டு வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்தான். இதில் ஹர்திக் பாண்டியாவின் தவறு எதுவும் கிடையாது” எனக் கூறியிருக்கிறார்.