“எல்லார் முன்னாடியும் மெக்கலம் இடம் மன்னிப்பு கேட்டேன்.. எந்த தவறும் இல்லை” – கம்பீர் தகவல்

0
70
Gambhir

ஐபிஎல் தொடரில் பலராலும் மறக்கப்பட்ட பேட்ஸ்மேனாக மட்டும் அல்லாமல், கேப்டனாகவுமே கவுதம் கம்பீர் இருக்கிறார்.

இளம் வீரர்களை அரவணைத்து வளர்த்துவதில் இருந்து, அணி வீரர்களிடம் எப்பொழுதும் நேரடியான வெளிப்படையான தொடர்பு கொண்டிருப்பது வரை, கம்பீர் கேப்டனாக ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அவரது தலைமையில் இரண்டு முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

மகேந்திர சிங் தோனி மற்றும் ரோகித் சர்மாவுக்கு அடுத்து அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்றவராக கவுதம் கம்பீர் மட்டுமே இருக்கிறார். மேலும் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் அவர் மிகச் சிறப்பான முறையில் ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறார்.

இது மட்டுமே இல்லாமல் தன்னுடைய பார்ம் சரியாக இல்லாத பொழுது, அவரே தன்னை விடுவித்துக் கொண்டு இன்னொரு வீரர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கு வழி கொடுத்தார். கிரிக்கெட் மற்றும் அணி என்று வரும் பொழுது எந்தவித சுயநலமும் இல்லாமல் செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இவர் 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் அரையிறுதி போட்டி என்பது நியூசிலாந்து அணியின் வீரர் பிரண்டன் மெக்கலம் இடம் எல்லோரும் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்ட விஷயத்தை தற்பொழுது கூறி இருக்கிறார். அப்போது இந்திய வீரர் லட்சுமிபதி பாலாஜி காயமடைந்த காரணத்தினால், வெளிநாட்டு வீரர் பிரெட்லீ அணியில் இடம்பெற வேண்டிய தேவை உண்டானது, இதனால் வெளிநாட்டு வீரர் மெக்கலமை வெளியில் வைக்க வேண்டியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பாக ஒட்டுமொத்த அணியின் முன்னால் மெக்கலம் இடம் நான் மன்னிப்பு கேட்டேன். ‘ உங்களை அணியில் சேர்க்க முடியாத அதற்கு காரணம் நீங்கள் சரியாக விளையாடவில்லை என்று கிடையாது. தற்போது காம்பினேஷன் அமைக்க முடியவில்லை” என்று அனைவரின் முன்னாலும் மன்னிப்பு கேட்கும் தைரியம் எனக்கு இருந்தது. மன்னிப்புகேட்பதில் தவறில்லை.

இதையும் படிங்க : ஸ்ரேயாஷ் ஐயரால் முடியாதது.. 19 வயது சச்சின் தாஸால் எப்படி முடிகிறது?.. தந்தை கொடுத்த பேட்டி

நான் அப்பொழுது அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், என் இதயத்தில் மிக ஆழமாக அவரை அணியில் சேர்க்க முடியாத குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்திருக்கும். கேப்டன் என்பவர் பாராட்டுகளை மட்டுமே வாங்கிக் கொள்பவர் கிடையாது. சில நேரங்களில் இப்படியான சூழல்களையும் சந்தித்து அதற்கு சரியாக செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.