2023 செஞ்சதே போதும்.. 2024 டி20 உலக கோப்பைக்கு வேண்டாம் – தோனி மீது கம்பீர் மறைமுக விமர்சனம்

0
121
Dhoni

மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை என இரண்டு பெரிய உலகக் கோப்பை தொடர்களை வென்று இருக்கிறது. அதற்குப் பிறகு இதுவரையில் இந்திய அணி உலக கோப்பை தொடரை வெல்லவில்லை.

இந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரராக கௌதம் கம்பீர் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார். குறிப்பாக நாக் அவுட் சுற்றில் கம்பீரின் பேட்டிங் செயல்பாடு இந்திய வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது.

- Advertisement -

கம்பீர் தன்னுடைய பேட்டிகளில் எப்பொழுதும் ஒரு நபரால் ஒரு கோப்பையை வெல்ல முடியாது, ஒரு அணியால் மட்டும் தான் ஒரு கோப்பையை வெல்ல முடியும், எனவே ஒரு அணியின் வெற்றிக்கு தனிநபரை பொறுப்பாக்கக் கூடாது, இந்தியாவில் தனிநபர் வழிபாடு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்.

மேலும் மீடியாக்கள் தான் தோனி போன்றவர்களை உருவாக்கி இருக்கிறது என்றும், 2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜாகிர் கான் மற்றும் யுவராஜ் சிங் போன்றவர்களுக்கான அங்கீகாரம் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

விளம்பரங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்

கடந்த ஆண்டு 2023 இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடைபெற்றது. அதில் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஓரியோ பிஸ்கட் கம்பெனிக்கு மகேந்திர சிங் தோனி ஒரு விளம்பரத்தில் நடித்தார். அந்த விளம்பரத்தில் சூசகமாக 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றது போல 2023 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் வெல்லும் என்பதாக காட்சிகள் வரும்.

- Advertisement -

நடந்து முடிந்த இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக முதல் 10 ஆட்டங்களில் வென்று, பதினோராவது போட்டியாக இறுதிப்போட்டியில் துரதிஷ்டவசமாக ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிடும். தற்பொழுது அந்த விளம்பரத்தை இந்த உலகக் கோப்பை தோல்வியோடு தொடர்பு படுத்தி கம்பீர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : சர்ப்ராஸ் கானுக்கு ஏமாற்றம்.. குஜராத் மற்றும் ராஜஸ்தான் புதிய மாற்று வீரர்களை வாங்கியது

அதில் கம்பீர் கூறும் பொழுது “உலகக்கோப்பையில் விளையாடி வெற்றி பெற்றதால் எனக்கு அந்த அழுத்தமும் தெரியும் அதன் மகிழ்ச்சியும் தெரியும். 140 கோடி இந்திய மக்கள் மூச்சை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறார்கள். நாம் உலகக் கோப்பையில் வெல்வது தான் முக்கியம். எனவே தோழர்களே இனி எந்த திருப்பத்தையும் உள்ளே கொண்டு வர வேண்டாம். விளம்பரங்களை அனுமதிக்காதீர்கள். இந்திய அணி வீரர்களை விளையாட விடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.