சர்ப்ராஸ் கானுக்கு ஏமாற்றம்.. குஜராத் மற்றும் ராஜஸ்தான் புதிய மாற்று வீரர்களை வாங்கியது

0
254
IPL2024

ஐபிஎல் 17வது சீசன் இன்று துவங்க இருக்கும் நிலையில், காயம் அடைந்திருக்கும் வீரர்களுக்கான மாற்று வீரர்களை வாங்குவதில் அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஏறக்குறைய டெல்லி அணி மட்டுமே இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கு பதிலாக இன்னும் மாற்றுவீரரை வாங்காமல் இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடந்த ஆண்டு மிக வலிமையாக இருந்த போதிலும் கூட எதிர்பாராத விதமாக, ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதியில் சொதப்பி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. எனவே இதன் காரணமாக இந்த முறை பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்துவதில் மிகத் தீவிரமாக இருக்கிறது.

- Advertisement -

சர்பராஸ் கானுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்


அதே சமயத்தில் இதில் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஆட்டம் ஜாம்பா திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து விலகினார். எனவே அவர்களது திட்டத்தில் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது. சரியான மாற்றுவீரரை சுழல் பந்து வீச்சுக்கு தேடியாக வேண்டிய இடத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருந்தார்கள்.

ஆனாலும் ஓரளவுக்கு சமாளித்து மும்பை ஆப் ஸ்பின் ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்டியனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது. இந்த முறை ரஞ்சி டிராபி தொடரில் பந்துவீச்சில் கலக்கியதோடு, அரை இறுதியில் பத்தாவது விக்கெட் ஆக வந்து சதம் அடித்தும் மும்பைக்கு பெரிய தூணாக இருந்தார். 25 வயதாகும் இவர் 23 டி20 உள்நாட்டு போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை ஓவருக்கு ஆறு ரன்கள் மட்டுமே தந்து கைப்பற்றி இருக்கிறார். மேலும் கடைசியில் வந்து 9 போட்டிகளில் பேட்டிங்கில் 64 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இதேபோல் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இடது கை விக்கெட் கீப்பிங் இந்திய இளம் பேட்ஸ்மேன் ராபின் மின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் பழங்குடியின வீரர் என்கின்ற சிறப்பு இவருக்கு கிடைத்தது. இவரை எல்லோரும் லெப்ட் ஹேண்ட் பொல்லார்ட் என்று அழைக்கும் அளவுக்கு அதிரடியான வீரர். அதிக எதிர்பார்ப்பு இவர் மீது இருந்த நிலையில், எதிர்பாராதவிதமான பைக் விபத்தின் காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடரில் துரதிஷ்டவசமாக விளையாட முடியாமல் போயிருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வழக்கம்போல் தென்னிந்திய வீரர்களை குறி வைத்து கர்நாடகாவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் கேபி.சரத்தை வாங்கி இருக்கிறது. இவர் 28 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடி 118 ஸ்ட்ரைக் ரேட்டில் 328 ரன்கள் எடுத்திருக்கிறார். பெரும்பாலும் இவருக்கு விளையாட வாய்ப்புகள் கிடைப்பது கடினம்தான்.

இதையும் படிங்க : சிஎஸ்கே பதிரனா எப்படி இருக்கிறார்.. ஐபிஎல்-ல் எப்போது ஆடுவார்? – மேனேஜர் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரண்டு அணிகளும் இந்த இரண்டு வீரர்களை இருபது லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கின்றன. ராபின் மின்ஸ் இடத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கானை வாங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான அதிக வாய்ப்புகளும் இருக்க செய்தது. ஆனால் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாத ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கின்ற புதுமுக வீரரை வாங்கியிருக்கிறது. சர்ப்ராஸ் கான் விஷயத்தில் இது ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.