ஆஸியில் இருந்து வந்த மண்.. டி20 உ.கோ இந்தியா ஆடும் அமெரிக்க நகரும் ஆடுகளம்.. முழு விபரங்கள்

0
517
Nassau

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் தற்பொழுது டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்கு அமெரிக்காவில் முகாமிட்டு இருக்கிறது. முதல் சுற்றில் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை நியூயார்க் நகரில் அமைந்திருக்கும் நாசாவ் சர்வதேச மைதானத்தில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த மைதானம் மற்றும் ஆடுகளத்தை பற்றி பார்க்கலாம்!

இந்திய அணி நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் முதல் சுற்றில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் 5-ம் தேதி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் 9-ம் தேதி, அமெரிக்க அணிக்கு எதிராக ஜூன் 12-ம் தேதி நியூயார்க் நாசாவ் சர்வதேச மைதானத்தில் விளையாடுகிறது. ஜூன் 15-ம் தேதி கனடா அணிக்கு எதிராக ஃப்ளோரிடா மைதானத்தில் முதல் சுற்றின் கடைசி போட்டியில் விளையாடுகிறது.

- Advertisement -

இதில் இந்திய அணி முதல் மூன்று போட்டிகளை விளையாடும் நியூயார்க் நாசாவ் சர்வதேச மைதானம் இந்த ஆண்டு கட்டப்பட்ட புதிய மைதானம் ஆகும். மொத்தம் 32 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இந்த மைதானம் நல்ல பெரிய அளவில் கட்டப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த மைதானத்தின் ஆடுகளம் டிராப் இன் பிட்ச் ஆடுகளம் ஆகும். இப்படிப்பட்ட வகை ஆடுகளம் என்பது வெளியில் தயாரிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெறும் பொழுது கொண்டு வந்து மைதானத்தில் அமைத்துக் கொள்ளும் வகை ஆடுகளம் ஆகும். ஆஸ்திரேலியாவில் இப்படியான ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கிரிக்கெட் விளையாடாத நேரங்களில் மற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

- Advertisement -

மேலும் இந்த மைதானத்தின் ஆடுகளத்திற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்திலிருந்து மண் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மேலும் நியூயார்க் மற்றும் அடிலெய்ட் இரண்டு நகரங்களுமே கடற்கரையை ஓட்டியே அமைந்திருக்கின்றன.

இதையும் படிங்க : உலக கோப்பையை ஜெயிக்க.. இத மட்டும் செய்யக்கூடாது.. அப்புறம் வீக்னஸ் ஆயிடும் – விராட் கோலி கருத்து

இந்த ஆடுகளமும் ஆஸ்திரேலியா அடிலெய்ட் ஆடுகளம் போலவே கொஞ்சம் புல் இருக்கும்படியும் பந்து திரும்பும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஒரு போட்டி கூட நடைபெறாமல் இருக்கின்ற காரணத்தினால் ஆடுகளம் எப்படி இருக்கும்? என்று தெரியாது. ஆனாலும் ஆஸ்திரேலிய அடிலெய்ட் ஆடுகளத்தைப் போலவேதான் எல்லாமே இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு டி20 உலக கோப்பையில் இந்த மைதானத்தில் மொத்தம் எட்டுப் போட்டிகள் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -