உலக கோப்பையை ஜெயிக்க.. இத மட்டும் செய்யக்கூடாது.. அப்புறம் வீக்னஸ் ஆயிடும் – விராட் கோலி கருத்து

0
383
Virat

இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றிய இருந்தது. அதற்குப் பிறகு 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றிய இருந்தது. அங்கிருந்து இதுவரையில் எந்த ஒரு ஐசிசி தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை. தற்பொழுது இது குறித்து விராட் கோலி பேசியிருக்கிறார்.

உலக கிரிக்கெட்டில் தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய சக்தியாக விளங்குகிறது. இதற்கு மிக முக்கியமாக இந்தியாவின் மக்கள் தொகையும், பெரிய மக்கள் தொகையில் பெரிய அளவில் அவர்கள் கிரிக்கெட் ரசிகர்களாக இருப்பதும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய அளவில் வருமானத்தை கொடுத்து வருகிறது.

- Advertisement -

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிகப்பெரிய அளவில் அதிகாரம் மையமாக மாற்றும் வகையில் ஐபிஎல் தொடர் உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடராக மாறி இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

ஒரு பக்கம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அசுர வளர்ச்சி, இன்னொரு பக்கம் இந்தியாவில் கிரிக்கெட்டை ஒரு மதம் போல பாவிக்கக்கூடிய ரசிகர்கள் என இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய அளவில் நெருக்கடியும் அழுத்தமும் இருந்து வருகிறது. பெரிய தொடர்களில் பெரிய போட்டிகளில் இது இந்திய வீரர்களின் செயல் திறனை பாதிக்கும் அம்சமாகவும் இருக்கிறது.

இது குறித்து பேசி இருக்கும் விராட் கோலி கூறும் பொழுது “இந்திய அணியிடம் நம் மக்களுக்கு நம்பிக்கையை எதிர்பார்ப்போ இருக்கக் கூடாது என நாம் நினைப்பது எதார்த்தமான ஒன்றாக இருக்க முடியாது. நம் நாட்டில் மக்கள் கிரிக்கெட்டை வேறு விதமாக பார்க்கிறார்கள். கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் ரோகித் ஹர்திக்.. இந்த 3 பேருமே என்னை இந்த மாதிரி ஸ்லெட்ஜிங் செய்திருக்காங்க – தினேஷ் கார்த்திக் சுவாரசிய தகவல்

இது நம்முடைய பலமாகவும் அமைகிறது. நமக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நாம் அதிலிருந்து ஆற்றலையும் உந்துதலையும் பெற வேண்டும் என்று நினைக்கிறேன். நமக்குப் பின்னால் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது நமக்கு பலம் அளிக்கக் கூடிய ஒன்றாக மாற வேண்டும். மாறாக இந்த விஷயத்தில் அதிகப்படியாக நாம் கவனத்தைச் செலுத்தினால் நம்முடைய பலவீனமாகவும் இது மாறிவிடும். எனவே அப்படி செய்யக்கூடாது” என விராட் கோலி கூறி இருக்கிறார்