நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி கொண்ட போட்டியில், டெல்லி வீரர் மிட்சல் ஸ்டார்க் வீசிய பந்து ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட நோ-பால் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த போட்டியை நேற்று சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் மிட்சல் ஸ்டார்க் மிக அபாரமாக செயல்பட்டு 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதில் அவருக்கு ஒரு நோ-பால் கொடுக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு கிரிக்கெட் வர்ணனையில் இறந்தவர்களும் இது எப்படி நோ-பால் என கேள்வி எழுப்பினார்கள்.
எத்தனை வகையான நோ-பால் இருக்கிறது
கிரிக்கெட் பொறுத்த வரையில் பொதுவாக எடுத்துக் கொண்டால் பந்துவீச்சாளர் கிரீசை தாண்டி கால் வைத்து வீசும் பொழுது ஒரு நோ-பால் கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்து பேட்மேனின் இடுப்பு உயரத்திற்கு மேலே சென்றால் நோ-பால் கொடுக்கப்படுகிறது. இந்த இரண்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்த விஷயங்கள்.
இதற்கு அடுத்து பேட்ஸ்மேன் என்ட்டில் ஸ்டெம்பை பந்து தாண்டுவதற்கு முன்னால் ஆடுகளத்திற்கு வெளியே பந்து வீசப்பட்டிருந்தால் அதுவும் நோ-பால் ஆகும். மேலும் தற்போது இரண்டு பவுன்சர்கள் வீச அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது பவுன்சர் பேட்ஸ்மேனின் முன் தோள்பட்டைக்கு மேலே இருந்தால் அதுவும் நோ-பால் என்றே அறிவிக்கப்படும். இதைத் தாண்டி இன்னொரு சுவாரசியமான நோ-பாலும் இருக்கிறது.
ஆச்சரியப்படுத்தும் முக்கிய நோ-பால்
ஒரு பந்துவீச்சாளர் தன்னுடைய முன் காலை கிரீசை தாண்டி வைத்து வீசும் பொழுது நோ-பால் என்று அறிவிக்கப்படுவது ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். இதே போல கிரீசின் பக்கவாட்டில் ஒரு கோடு வரையப்பட்டு இருக்கும். அந்தக் கோட்டில் பந்துவீச்சாளரின் பின் கால் படக்கூடாது. அப்படிப்பட்டால் அதுவும் நோ-பால் என்றுதான் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க : ஹர்திக் கிரேட் எஸ்கேப்.. ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் மோசமான செக்.. தப்பிப்பாரா முன்னாள் கேப்டன்?
இந்த வகையில்தான் நேற்று மிச்சல் ஸ்டார் தன்னுடைய பின் காலை கிரீஸில் பக்கவாட்டு கோட்டில் வைத்து விட்டார். எனவே இதன் காரணமாக முக்கியமான நேரத்தில் அவருக்கு நோ-பால் கொடுக்கப்பட்டது. போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளர்களும் சில வினாடியில் இதை உணர்ந்து அதை நோ-பால்தான் என்று ஏற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






