விராட் கோலி டீம்ல வேண்டாமா? நானும் வீட்டுக்கு போறேன்.. தோனி செஞ்ச காரியம் – உமர் அக்மல் வெளியிட்ட தகவல்

0
1715
Virat

இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். 2013ம் ஆண்டு வாக்கில் அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் மகேந்திர சிங் தோனி விராட் கோலி எப்படி இந்திய அணியில் பாதுகாத்தார் என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் உமர் அக்மல் தெரிவித்திருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது நேருக்கு நேராக மகேந்திர சிங் தோனி விராட் கோலி அணியில் இருக்க வேண்டும் இல்லை என்றால் நான் வீட்டிற்கு சென்று விடுகிறேன் என்று கூறியதாகவும், பிறகு அது குறித்து தோனியிடம் பேசிய பொழுது தோனி அதற்கு பதிலளித்ததாகவும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

அந்த காலகட்டத்தில் விராட் கோலி சில போட்டிகளாக தொடர்ந்து சரிவர விளையாடாமல் மிகவும் நெருக்கடிகள் இருந்திருக்கிறார். இப்படியான நேரத்தில் இந்திய அணி நிர்வாகம் அவரை கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாட வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறது. அப்பொழுது டோனி அதற்கு சம்மதிக்காமல் விராட் கோலியைப் பாதுகாத்திருக்கிறார்.

இதுகுறித்து உமர் அக்மல் கூறும் பொழுது ” நான் உண்மையாக தோனி உடன் அமர்ந்து அந்த சுற்றுப் பயணத்தின் போது இரவு உணவு சாப்பிட்டேன். சுரேஷ் ரெய்னா யுவராஜ் சிங் மற்றும் சோயப் மாலிக் ஆகியோர் அப்போது உடன் இருந்தார்கள். நான் அவர்களிடம் ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வார்கள் என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது வந்த இந்திய அணியின் மேனேஜர் கடைசி ஒரு நாள் போட்டியில் விராட் கோலி விளையாட வைக்க வேண்டாம் என்று கூறினார். அதற்கு தோனி கடைசி ஆறு மாதங்களாக நானும் வீட்டிற்கு செல்லாமல் இருக்கிறேன். கேப்டன் பொறுப்பை ரெய்னா கவனிப்பார். எனவே விராட் கோலி உடன் சேர்ந்து நானும் வீட்டிற்கு கிளம்பி விடுகிறேன் என்று கூறிவிட்டார். மேலும் அவரிடம் சில போட்டிகளுக்காக விராட் கோலியை கைவிட முடியாது என்றும் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித்தை பார்த்து.. அந்த விஷயத்துல பாபர் மட்டுமில்லாம பாக் கிரிக்கெட்டே திருந்தனும் – ஷாகித் அப்ரிடி விமர்சனம்

அப்பொழுது இந்திய அணியின் மேனேஜர் இல்லை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறிவிட்டார். நான் தோனியிடம் ஏன் இப்படி சொன்னீர்கள்? என்று கேட்டேன். அதற்கு தோனி விராட் கோலி போன்ற ஒரு சிறந்த இளம் வீரரை சில ஆட்டங்கள் விளையாடவில்லை என்பதற்காக நாம் டிராப் செய்யக்கூடாது என்று கூறினார். இப்படி அப்போதே விராட் கோலியை தோனி அணியில் பாதுகாத்ததை நான் நேரடியாகப் பார்த்தேன்” என்று கூறியிருக்கிறார்.