ரோகித்தை பார்த்து.. அந்த விஷயத்துல பாபர் மட்டுமில்லாம பாக் கிரிக்கெட்டே திருந்தனும் – ஷாகித் அப்ரிடி விமர்சனம்

0
1284
Rohit

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றிய இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கிறது. இதை முன்வைத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஷாகித் அப்ரிடி விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த முறை நடைபெற்று முடிந்திருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா சார்பில் அதிக ரன்கள் எடுத்தவராக, அதிக பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்தவராக, அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியவராக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார்.

- Advertisement -

துவக்க இடத்தில் வந்து ரோகித் சர்மா தனி ஒரு வீரராக ஆட்டத்தை மாற்றக்கூடிய வகையில் விளையாடினான். மேலும் அணிக்கு அவர் கொடுத்த அந்த பாசிட்டிவ் எல்லோரையும் அவரவர் பங்குக்கு விளையாட வைத்தது. மேலும் ஒரு கேப்டனாகவும் களத்தில் மிகச்சிறந்த முடிவுகளை எடுத்திருந்தார்.

இந்த நிலையில் ரோஹித் சர்மா குறித்து பேசி இருக்கும் ஷாகித் அப்ரிடி “எப்பொழுதுமே ஒரு கேப்டனின் பங்கு மிகவும் முக்கியமானது. கேப்டனின் உடல் மொழியே அணியின் உடல் மொழியாக மாறும். தலைவர் எப்பொழுதும் முன் மாதிரியாக இருக்க வேண்டும். ரோகித் சர்மாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடும் விதத்தில், கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் நம்பிக்கை உடன் இருக்கிறார்கள். எனவே கேப்டனின் பங்கு மிக முக்கியமானது.

- Advertisement -

இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரின் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. மேலும் என்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பதைப் பார்க்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஆனால் நான் எப்பொழுதும் அணியை ஆதரித்தேன். அதை தொடர்ந்து செய்வேன்.

இதையும் படிங்க : இந்தியா டி20 தொடர்.. ஜிம்பாப்வே அணி அறிவிப்பு.. பாகிஸ்தான் வழி வீரர் சேர்ப்பு.. 5 முக்கிய வீரர்கள் நீக்கம்

ஆனால் எடுக்கக்கூடிய முடிவுகள் மிகவும் பாசிட்டிவாக இருக்க வேண்டும். மாற்றங்கள் மேலோட்டமானதாக இருக்கக் கூடாது. உண்மையான பிரச்சனை எங்களின் அடிமட்ட கிரிக்கெட்டில் இருக்கிறது. எங்களின்தயாரிப்பு பலவீனமாக இருக்கிறது. உள்நாட்டில் கீழ்மட்ட கிரிக்கெட்டில் முதலீடு செய்தால் நிறைய தரமான வீரர்கள் உருவாகி வருவார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -