மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் சிறப்பான ஆட்டமுறை குறித்து இந்திய முன்னாள் வீரர் ரோகித் சர்மா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கிய போது கருண் நாயரின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி அணி வெற்றி இலக்கை நோக்கி வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர் எதிர்பாராதவிதமாக சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டம் இறந்து வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய ஸ்டெப்ஸ் மற்றும் கேஎல் ராகுலை கரண் ஷர்மா வெளியேற்றினார்.
இது போட்டியை மும்பை அணியின் பக்கம் மாறுவதற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் டக் அவுட்டில் இருந்த ரோஹித் சர்மா போட்டியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு பயிற்சியாளர் ஜெயவர்தனேவிடம் கரன்சர்மாவை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதன் காரணமாகவே போட்டி மும்பை அணியின் பக்கம் திரும்பி கரண் மொத்தமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த சூழ்நிலையில் ஹர்பஜன் சிங் இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது ” ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் மாஸ்டர் ஸ்ட்ரோக்கை விளையாடினார். அவர் கரன்சர்மாவை பயன்படுத்துமாறு மும்பை அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்த்தனாவிடம் கேட்டுக் கொண்டார். அதுபோலவே கரன் சர்மா இந்த போட்டியில் மூன்று விக்கட்டுகள் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அது ஒரு தங்கமான நிகழ்வாக இருந்தது. அதே வேளையில் கோச் ஒரு மோசமான வேலையை செய்தார். டெல்லி அணிக்கு எதிராக ரோஹித் எப்போதுமே சிறந்த கேப்டனாக இருந்திருக்கிறார். எனவே பயிற்சியாளர்கள் தங்கள் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு அணி எவ்வாறு பயன் அடைய வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:ரோகித் வளர்ப்பு வேணாம்… சிஎஸ்கே ருதுராஜ் இடத்தில இந்த பையனை வாங்குங்க – ஆகாஷ் சோப்ரா அறிவுரை
ரோகித் சர்மா டக் அவுட் இல் இருந்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன். மகேலா ஜெயவர்தனே இந்த போட்டியில் இல்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை கோச் சொன்னதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறையில் தோல்வி அடைந்திருக்கும். ரோஹித் ஷர்மா எப்போதுமே ஒரு கேப்டனை போலவே சிந்திக்கிறார். ஒரு கேப்டன் எப்போதுமே கேப்டனாக இருப்பார். அவரது புத்திசாலித்தனமான செயல்கள்தான் மும்பை அணியை வெற்றிபெற வைத்தது” என்று பேசி இருக்கிறார்.






