தற்போது சிஎஸ்கே அணியில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்ய வேண்டும்? என்றும் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கும் கேப்டன் ருதுராஜ் இடத்திற்கு யாரை வாங்க வேண்டும் என்பது குறித்தும் ஆகாஷ் சோப்ரா அறிவுரை கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஆறு போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளை தோற்று புள்ளி பட்டியலில் பரிதாபமாக பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு வர முடியாவிட்டாலும் கூட கௌரவமாக தொடரை முடிப்பதற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.
சிஎஸ்கே அணியில் செய்ய தகுந்த மாற்றங்கள்
தற்போது சிஎஸ்கே அணியில் விக்கெட்டுகள் வேகமாக விழும் பொழுது ரவீந்திர ஜடேஜாவை கொண்டு வருவது மேற்கொண்டு விக்கெட்டுகள் இருப்பதை உறுதி செய்யும். அவரால் ஓரளவுக்கு ரன் ரேட்டை தொடர்ந்து காப்பாற்றி எடுத்துச் செல்ல முடியும். இதற்கு அடுத்து சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.
மேலும் தற்போதைய சிஎஸ்கே அணியில் இருந்து காயத்தின் காரணமாக வெளியேறி இருக்கும் கேப்டன் ருதுராஜின் இடத்திற்கு அனுபவமும் திறமையும் கொண்ட யாரையாவது கொண்டு வருவது சரியாக இருக்கும். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ரோகித் சர்மாவின் வளர்ப்பான 17 வயதான ஆயுஸ் மத்ரேவை ருதுராஜ் இடத்திற்கு வாங்குவதை விட வேறொரு வீரரை வாங்குவது சரியாக இருக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
ருதுராஜ் இடத்திற்கு இவரே சரியானவர்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நான் சிஎஸ்கே அணியை பார்க்கும் பொழுது எல்லா இடங்களிலும் பலவீனம் தெரிகிறது. தோனி வந்தால் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் தீரவில்லை. ஏனென்றால் சிஎஸ்கே தான் விளையாடும் விதத்தை மாற்றிக் கொள்ளவில்லை. தற்போது ஷேக் ரசீதை கொண்டு வரலாம். மேலும் ருதுராஜ் இடத்திற்கு பிரித்திவி ஷாவை நான் கட்டாயம் வாங்க சொல்லுவேன். இதுதான் சரியானதாக இருக்கும்”
இதையும் படிங்க : ரசிகர்களே ஏமாற வேண்டாம்.. சிஎஸ்கே டிஎன்ஏவில் இது கிடையாது.. வேற வழி இல்ல – மேத்யூ ஹைடன் பேச்சு
“தற்போது ஜடேஜா பேட்டிங் வரிசையில் கீழே இருக்கிறார். அவரை பேட்டிங் வரிசையில் முடிந்த வரையில் நான்காவதாக கொண்டு வர வேண்டும். இதற்கு அடுத்து அஸ்வின் தன்னுடைய முழு பலத்தை அணிக்கு கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் அவரை நாம் வெளியில் கூட வைக்கலாம். ஆனாலும் சிஎஸ்கே அணி இந்த தொடரில் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது. கௌரவமாக முடிப்பதற்கு ஏதாவது செய்யலாம்” என்று கூறி இருக்கிறார்.






