கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த சூழ்நிலையில் இறுதிப் போட்டியின் போது அம்பத்தி ராயுடு மற்றும் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் குறித்து ராயுடு சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் விளையாடினர். இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணிக்கு ஆதரவாக ராயுடு ஆரஞ்சு நிறத்திலான கோட் ஒன்றை அணிந்திருந்தார். ஆனால் அதற்குப் பின்னர் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு உடனடியாக கொல்கத்தா அணியின் ஜெர்ஸி நிறத்திலான மற்றொரு கோட்டை மாட்டிக்கொண்டார்.
இந்த சூழ்நிலையில் இது குறித்து அப்போது விமர்சனம் செய்திருந்த கெவின் பீட்டர்சன், ஒரே அணிக்கு ஆதரவாக இல்லாததால் அம்பாதி ராயுடுவை ‘ஜோக்கர்’ என்று அழைத்தார். அது அப்போது சற்று சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த நிகழ்வு குறித்து ராயுடு தற்போது சில விஷயங்களை பகிர்ந்து பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “அந்த சமயம் நாங்கள் அணிகளை தேர்வு செய்யவில்லை. நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதனால் இறுதி போட்டியின் போது எனக்கு அந்தப் போட்டியில் விளையாடிய இரண்டு அணிகளின் ஜாக்கெட்டுகள் இருந்தன. அந்த சமயத்தில் கெவின் பீட்டர்சன் தனது விருப்பத்திற்கு சில விஷயங்களை சொன்னார். அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியிருந்தாலும் அந்த அணிக்காக எதுவும் செய்யாததால் சில விஷயங்களை எங்களால் கூற முடிந்தது. ஆனால் அதற்குப் பிறகு ஒளிபரப்பில் நான் அப்படி பேசி இருக்க கூடாது என்று மன்னிப்பு கேட்டார்.
இதையும் படிங்க:விராட் கோலிய பார்த்து எங்க பாகிஸ்தான் பிளேயர் திருந்தனும்.. உடனே இந்த முடிவை பாபர் ரிஸ்வான் எடுக்கணும் – தன்வீர் அகமத் பேட்டி
ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் அப்போது நகைச்சுவைக்காக மட்டுமே பேசிக் கொண்டோம். ஆனால் மக்கள் அதை வேறு விதமாக பார்த்தனர். ஆனால் அது அவரையே அதிகமாக பாதித்தது தவிர என்னை பாதிக்கவில்லை” என்று கெவின் பீட்டர்சன் பேசி இருக்கிறார்.