விராட் கோலிய பார்த்து எங்க பாகிஸ்தான் பிளேயர் திருந்தனும்.. உடனே இந்த முடிவை பாபர் ரிஸ்வான் எடுக்கணும் – தன்வீர் அகமத் பேட்டி

0
142
Virat

தற்போது பாகிஸ்தான் தேர்வுக்குழு ஆசியக் கோப்பை பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானை நீக்கியது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமத் அறிவுரை கூறியிருக்கிறார்.

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 வடிவத்தில் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சேர்க்கப்படவில்லை. தற்போது இது பெரிய விமர்சனமாக மாறியிருக்கிறது.

- Advertisement -

காரணம் என்ன?

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் பாபர் அசாம் சுழல் பகுதிக்கு எதிராக தாக்கி ஆடும் திறன் குறைவாக இருப்பதாகவும், அவர் மேற்கொண்டு பிபிஎல் மற்றும் பிற வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதின் மூலமாக இவற்றை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

இத்துடன் தொடர்ந்து வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடும் பொழுது அதன் மூலம் பாபர் அசாம் திரும்பி பாகிஸ்தான் டி20 கிரிக்கெட்டுக்கு வர முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார். முகமது ரிஸ்வானுக்கும் மீண்டும் பாகிஸ்தான் டி20 அணியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஓய்வு பெற்று விடுங்கள்

இதுகுறித்து தன்வீர் அகமத் கூறும் பொழுது ” பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவருக்கும் ஒரே ஒரு கோரிக்கை என்னிடம் இருக்கிறது. அது என்னவென்றால் உங்களுக்கு தற்போது சரியான மரியாதை கிடைக்க வில்லை என்று நீங்கள் நினைத்தால் உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுங்கள். ஏனென்றால் விராட் கோலி இதை செய்து நம் முன்னே மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார்”

இதையும் படிங்க : அந்த 2 பசங்கள விட முடியாது.. உங்க ஆள் வேணாம்.. கம்பீர் அகர்கர் பிளானுக்கு பிசிசிஐ செக் – வெளியான தகவல்கள்

“பகார் ஜமான் எப்படி பாகிஸ்தான் டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று புரியவில்லை. பாபர் அசாமை சேர்க்கக்கூடாது என்ற காரணத்திற்காக இவரை அணியில் சேர்த்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -