இந்திய கிரிக்கெட்

பிசிசிஐ கில்லுக்கு தப்பு செய்ய கூடாது.. இந்த ரெண்டு பேர வச்சு ஸ்ட்ராங் பண்ணி தரணும் – சுரேஷ் ரெய்னா கோரிக்கை

இந்திய ஒருநாள் கிரிக்கெட் திட்டங்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இருக்க வேண்டும் என பிசிசிஐக்கு இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சிராஜை சரியான முறையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் வரவிருக்கும் நிலையில் அதற்கு அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

கில்லுக்கு ஆதரவு தேவை

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய டெஸ்ட் அணியை போலவே இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியும் இளம் வீரர்களைக் கொண்டு அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதற்காக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை முன்கூட்டியே ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளி கொண்டு இருக்கிறது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் புதிய அணியை உருவாக்க முயற்சிகள் ஆரம்பித்திருக்கிறது.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும் பொழுது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரது அனுபவமும் அணிக்கு மிகவும் முக்கியமானது. எப்பொழுதும் அனுபவமும் இளமையும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியமானது. தற்சமயத்தில் கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இருந்த போதும் அவருக்கு துணையாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே தேவை”

- Advertisement -

சிராஜுக்கு இதைச் செய்யணும்

“இந்த ஜோடி சாம்பியன் டிராபியை வென்று இருக்கிறார்கள் மேலும் உலகக் கோப்பையையும் வென்று இருக்கிறார்கள். விராட் கோலி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரையும் வென்றிருக்கிறார். அவர்கள் கடந்த காலத்தில் செயல்பட்ட விதத்திற்கு இந்திய ஓய்வறையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். எனவே அவர்கள் இந்திய ஒருநாள் கிரிக்கெட் திட்டங்களில் இடம்பெற வேண்டும்”

இதையும் படிங்க : 2026 டி20 WC.. இந்தியாவுக்கு தலைவலி தரும் ஆஸி.. மேக்ஸ்வெல் வரை மாஸ் பிளான்.. முழு அலசல்

“மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் 187 ஓவர்களை வீசி இருக்கிறார். அவர் வெள்ளை பந்து மற்றும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் எவ்வாறு பங்களிப்பை கொடுத்திருக்கிறார் என்பதை பார்த்து அவரை மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட வைத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts