அடுத்த ஆண்டு 2026 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில், கோப்பையை கைப்பற்றுவதற்கு ஆஸ்திரேலியா அணி மிகச் சிறந்த முறையில் தயாராகி வருகிறது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை அவர்களது சொந்த மண்ணிலேயே வைத்து ஒயிட் வாஸ் செய்து வென்று அசத்தியது. தற்போது தங்களது சொந்த மண்ணில் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் தயாரிப்பு
கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பு டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று இருந்தது. பிறகு ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களை அடுத்தடுத்து இழந்தது. இந்த இரண்டு தொடர்களிலும் அரையிறுதியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக தற்பொழுது ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் முழுக்க முழுக்க டி20 கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் பேட்டிங் வரிசையை நீட்டிப்பதுடன், இந்தியா இலங்கை சூழலுக்கான சுழல் பந்து வீச்சு வரிசையையும் பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
மேக்ஸ்வெல் வரையில் திட்டம்
தற்போது பவர் பிளவில் பந்து வீசும் அளவுக்கு முழு சுழல் பந்துவீச்சாளராக மேக்ஸ்வெல் மாறியிருக்கிறார். இவர் அடுத்து டி20 உலகக் கோப்பை தொடரில் பவர் பிளேவில் பந்து வீசுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இவருடன் சேர்ந்து ஆடம் ஜாம்பா முழுமையான சுழல் பந்துவீச்சாளராக இடம் பெற்று விடுவார். மிகச் சரியான சுழல் பந்துவீச்சு கலவை ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்துவிடும்.
இத்துடன் மூன்று பந்துவீச்சாளர்களில் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் பேட்டிங் செய்ய முடிந்தவர்கள். இதில் கேசில்வுட் மற்றும் ஆடம் ஜாம்பா மட்டுமே பெரிய அளவில் பேட்டிங் செய்ய மாட்டார்கள். இந்த வகையில் பேட்டிங் வரிசை ஒன்பது வரையில் இருக்கும். அதே சமயத்தில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக மிட்சல் மார்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் இருப்பார்கள். மேலும் இவர்களுடன் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராக ஹெட் இருப்பார். இந்த வகையில் மொத்தம் ஏழு பந்துவீச்சு விருப்பங்கள் இருக்கும்.
இதையும் படிங்க : சந்தேகமே வேண்டாம்.. விராட் கோலியின் இடம் இந்த பையனுக்குதான்.. செம குவாலிட்டி – ரவி சாஸ்திரி கணிப்பு
இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி வலிமையான பேட்டிங் யூனிட் மற்றும் பவுலிங் யூனிட் இரண்டையும் கொண்டிருக்கும். இதன் காரணமாக சொந்த மண்ணில் டி20 உலக கோப்பை தொடரை வெல்லும் இந்திய அணி நிர்வாகத்தின் திட்டத்திற்கு ஆஸ்திரேலியா பெரிய தலைவலியை கொடுக்கும் என கிரிக்கெட் வல்லுனர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது.






