இந்திய கிரிக்கெட்

விராட் ரோஹித் இல்லனாலும் பிரச்சனை இல்லை.. இந்த ஒரு விஷயத்தை பார்த்தாலே போதும் – சந்திப் பாட்டீல் பேச்சு

​வரும் 2027 ஓடிஐ வேர்ல்ட் கப் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் டீமின் முன்னாள் கோச் சந்தீப் பாட்டீல், அவர்கள் டீமில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த பிரச்சனையும் வராது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

​இந்திய டீமில் உள்ள யங் பிளேயர்கள் மற்றும் அவர்களின் பெஞ்ச் ஸ்ட்ரென்த் மிகவும் வலுவாக இருப்பதால், இந்த சீனியர் பிளேயர்கள் இல்லாத சூழலிலும் டீம் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

​ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே கிரிக்கெட் உலகின் லெஜண்ட்ஸ் என்றும், அவர்கள் தொடர்ந்து விளையாடுவது அவர்களின் ஃபிட்னஸ் மற்றும் செலெக்டர்ஸ் எடுக்கும் முடிவை பொறுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​இதுகுறித்து சந்தீப் பாட்டீல் பேசும்போது “இது முற்றிலும் இந்த இரண்டு பிளேயர்களை பொறுத்தது, அவர்கள் தொடர்ந்து விளையாட விரும்புகிறார்களா, ஃபிட்னஸ் தக்கவைத்துக்கொள்வார்களா மற்றும் செலெக்டர்ஸ் எதிர்காலத்தை மனதில் கொண்டு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை அவர்கள் விலகும் காலம் வந்தால் அவர்களுக்கு மாற்றாக விளையாட தகுதியான பிளேயர்கள் நம்மிடம் இருக்கிறார்களா என்பதை நாம் யோசிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய சந்தீப் பாட்டீல் “இந்திய டீமின் பெஞ்ச் ஸ்ட்ரென்த் மிகவும் சிறப்பாக இருப்பதால், விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா டீமில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த பிரச்சனையும் வராது என்று நான் நினைக்கிறேன். இவர்கள் இருவரும் பல வருடங்களாக விளையாடி வரும் லெஜண்ட்ஸ், ஒயிட் பால் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஒரு சிறப்பான பிளேயர், விராட் பற்றி நான் எவ்வளவு சொன்னாலும் அது குறைவாகவே இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts