இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரிஸ் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் மிக மோசமாக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பாபர் அசாமின் கேப்டன்சி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் முடிந்த இந்த ரெட் பால் தொடரில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் டீம் தோல்வியடைந்தது. மேலும் வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
இந்த மோசமான பெர்ஃபார்மன்ஸ் காரணமாக டீமில் இருந்து ஏழு பிளேயர்கள் நீக்கப்பட்டு, கோச்சிங் ஸ்டாஃப் மாற்றப்பட்ட சம்பவங்கள் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வசீம் அக்ரம் பேசும்போது “எனக்கு யார் மீதும் பிளேம் செய்ய விருப்பமில்லை, பாபர் அசாம் மீண்டும் கேப்டன்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இந்த தொடரின் போது நடந்த எந்த மாற்றமும் எனக்கு தெரியாது என்று பாபர் அசாம் கூறுகிறார், என்றால் அவர் அங்கே என்ன செய்து கொண்டிருந்தார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய வசீம் அக்ரம் “ஒரு கேப்டன் தன் டீம் பிளேயர்களுக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றால் அவர்களால் ஃபீல்டில் 100 பெர்சென்ட் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்க முடியாது. எனவே இரண்டாவது டெஸ்ட் மேட்ச் முடிந்த உடனேயே பாபர் அசாம் கேப்டன்சியை விட்டு விலகி ஒரு பிளேயராக மட்டும் விளையாடி இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.