டி20 உலகக் கோப்பை 2024

2 அணிகளுமே ஸ்ட்ராங்தான்.. ஆனா இந்த ஒரு விஷயத்துனால இந்தியாவுக்குதான் இப்போ வாய்ப்பு அதிகம்- ஜாஹிர்கான் பேட்டி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒன்பதாவது டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி இன்று பார்படாஸ் நகரில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இதற்காக இரண்டு அணிகளும் தற்போது மிகத் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் பேகப்பந்துவீச்சாளரான ஜாகீர் கான் டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்குதான் வாய்ப்பு அதிகம் எனவும் அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.

இந்த டி20 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டி வரை முன்னேறி உள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும், மேலும் அணியின் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் ஆகியோருக்கும் இதுவே கடைசி ஐசிசி தொடராக கருதப்படுவதால் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரை இதுவரை ஒரு ஐசிசி டிராபியை கூட வெல்லாத நிலையில் 32 ஆண்டு கால ஏக்கத்தை தணிக்க இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் கங்கணம் கட்டி வருகின்றனர். இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு தற்போது சரிசமமாக கருதப்படுவதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு பரபரப்பு பஞ்சம் இருக்காது. இந்த சூழ்நிலையில் இந்த உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தனது கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஜாகிர் கான் விரிவாக கூறும் பொழுது “இந்த இறுதிப் போட்டியின் மூலம் வெற்றிப் பாதையில் இருக்கும் இரண்டு அணிகளில் ஒரு அணி தோற்கடிக்கப்படும். இது இறுதிப் போட்டிக்கு ஒரு சரியான சவாலை அமைக்கிறது. மேலும் வெற்றியை கண்டறிவதில் தற்போது இரண்டு அணிகளுமே நிலையாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் காகிதத்தை பொருத்தவரை தற்போது இந்த இரண்டு அணிகளுமே வலுவானவை. ஆனால் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவை விட அழுத்தத்தை அதிகமாக உணரும். ஏனென்றால் அவர்களுக்கு இது முதல் இறுதிப் போட்டி.

அதனால் அந்த அழுத்தம் தென் ஆப்ரிக்க அணிக்கு எப்போதும் இருக்கும். ஆனால் இந்திய அணி பொறுத்த வரை அவர்கள் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியை சந்தித்தவர்கள். தற்போதைய அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய அனுபவத்தை பெற்றவர்கள். இதனால் இறுதி போட்டியை வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்திய அணிக்கு நன்றாகவே தெரியும். இந்த ஒரு விஷயத்தில்தான் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை விட ஒரு அடி முன்பு இருக்கிறது. இதனால் இது இந்திய அணிக்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது” என்று ஜாகிர் கான் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ரோகித் கிடையாது.. இந்திய அணி அணுகுமுறையை மாற்றியது இவர்தான்.. வீட்டில் இருந்து கூட யோசித்தார் – அஸ்வின் பேச்சு

ஆனால் இது குறித்து மைக்கேல் வாகன் கருத்து தெரிவிக்கும் பொழுது ” தென்னாபிரிக்க அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் யூனிட் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும். இங்கிலாந்து அணியை போல நிச்சயமாக தென்னாப்பிரிக்கா இருக்காது. இந்திய அணிக்கு நிச்சயம் கடும் சவாலை அளிக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by