தற்போது இந்திய அணியின் தலைமை பேச்சாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிகிறது. இன்று நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிடாவிட்டால் அவருக்கு இதுவே இந்திய அணியுடன் பயிற்சியாளராக கடைசி நாளாக இருக்கும். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ராகுல் டிராவிட் அணிக்காக எவ்வாறு உழைத்திருக்கிறார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றில் வெளியேறியது. இதற்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி வந்தது. இங்கிருந்து இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்திய அணியில் முன்பு சாதாரணமாக எந்த பரிசோதனை முயற்சிகளும் செய்யப்படாமல் இருக்கும். ஆனால் இவர்களது கூட்டணியில் நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டு, நிறைய புதிய வீரர்கள் அணிக்குள் கொண்டுவரப்பட்டார்கள். இவர்களது கடுமையான முயற்சிக்கான பலனை தற்பொழுது இந்திய அணி இரண்டு உலகக் கோப்பைகளாக அனுபவித்து வருகிறது.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” நான் ஒரு புனிதமான நபரைப் பற்றி பேச இருக்கிறேன். 2007 ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் வெளியேறியது. அப்போது கேப்டன் ராகுல் டிராவிட். அதற்குப் பிறகு அவர் கேப்டனாக இல்லை. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு முறை இந்திய அணி தோல்வி அடையும் பொழுது ராகுல் டிராவிட் என்ன செய்கிறார்? என்று கேட்கிறார்கள்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் இந்திய அணி உடன் என்ன செய்து வருகிறார் என்பது எனக்கு தெரியும். அவர்எவ்வளவு சமநிலையுடன் இருந்தார், அணியின் அணுகுமுறையை மாற்ற எவ்வளவு கடுமையாக உழைத்தார்,ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர் என்ன கொடுத்தார் என்பது எனக்கு தெரியும். அவர் வீட்டில் இருந்தபடியே கூட அணிக்காகத் திட்டமிட்டு கொண்டிருந்தார்.
இதையும் படிங்க : கோலி எப்படி வேணா ஆடட்டும்.. ரோகித் கண்டுபிடிச்சிருக்க அதே போதும்.. உ.கோ இந்தியாவுக்குதான் – மஞ்ச்ரேக்கர் பேச்சு
நாம் அனைவரும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகக் கோப்பையின் இறுதி போட்டிக்கு செல்வது மிகப்பெரிய விஷயம். கண்டிஷன் கடுமையாக இருந்தது. இதனால் சவால்கள் நிறைய இருந்தது. அணியின் சவால்கள் பற்றி வெளியில் இருந்து தெரிந்து கொள்ள முடியாது. இங்கு சிறிய விஷயங்கள் கூட பெரிய சவாலாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






