நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் 11 ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்னில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரன்களை வழங்கும் அஸ்வின்
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே அணியில் மூன்று உலகத்தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் மூன்று போட்டிகள் தற்போது முடிவடைந்திருக்கும் நிலையில் சென்னை அணி அதில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இதுவரை நடைபெற்ற மூன்று ஆட்டங்களிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் எதிரணிகளுக்கு ரன்களை கொடுக்கக் கூடிய வீரராக இருந்து வருகிறார்.
மும்பை அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றிய அஸ்வின், அதற்குப் பிறகு பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பில் சால்ட் அவரது பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அதேபோல நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் நித்திஷ் ரானா குறிப்பாக அஸ்வினின் ஓவரில் தாக்குதல் ஆட்ட முறையை கடைப்பிடித்தார். இதனால் நேற்றைய போட்டியில் அஸ்வின் நான்கு ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த சூழ்நிலையில் அஸ்வினின் பந்துவீச்சு குறித்து மைக்கால்வாகன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
மைக்கேல் வாகன் கருத்து
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” அஸ்வின் தற்போது ஒரு புதிய யுகத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அஸ்வினுக்கு பேட்ஸ்மேன்கள் நிறைய மரியாதை கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். முன்பு நடைபெறும் குழு கூட்டங்களில் அஸ்வினை எதிர்கொண்டு விளையாடினால் 24 முதல் 28 ரன்கள் வரை எடுக்கலாம், அவருக்கு விக்கட்டுகள் கொடுக்க முடியும் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் பேட்ஸ்மேன்கள் அவ்வாறு நினைப்பதில்லை. அவரை எப்படி சேதப்படுத்த முடியும், அவரது பௌலிங்கை எப்படி அட்டாக் செய்து விளையாட முடியும் என்று நினைக்கிறார்கள்.
இதையும் படிங்க:தோனி 14வது ஓவரில் பேட்டிங் வர இதுவே காரணம்.. முன்பு போல இதை அவரால் செய்ய முடியாது – சிஎஸ்கே கோச்
அஸ்வின் தனது பவுலிங் சரியாக கையாள்வது இல்லை. அவரது பந்து வீச்சு முறையை பேட்ஸ்மேன்கள் நிறைய முறை பார்த்திருக்கலாம். அதனால் அவர்கள் இவரை கொஞ்சம் சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். மனநிலையைப் பொறுத்தவரை இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை என்று நினைக்கிறேன். இப்போது உள்ள பேட்ஸ்மேன்கள் பொறுத்தவரை பெயர்கள் குறித்து எதுவும் பார்ப்பதில்லை, பந்து அவர்களுக்கு கீழாக வருகிறதா அதை அடித்து விளையாட முடியுமா? என்பது பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






