ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய வந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சிஎஸ்கே 6 ரன்னில் தோல்வி
கௌஹாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் நித்திஷ் ராணா 36 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ரியான் பராக் 37 ரன்கள் குவித்தார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்கத்திலேயே விக்கெட் களை இழந்த சென்னை அணி, அதிரடியாக விளையாடக்கூடிய பெரிய பேட்ஸ்மேன்கள் இல்லாத காரணத்தால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருத்ராஜ் 44 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இந்த சூழ்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி சற்று மேலே பேட்டிங் ஆர்டரில் வந்திருந்தால் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும் என்ற விமர்சனங்கள் தற்போது எழுந்து வரும் நிலையில் அது குறித்து பயிற்சியாளர் பிளமிங் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தோனி குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “மகேந்திர சிங் தோனி தனது பேட்டிங் நிலையில் வருவது சரிதான். ஏனென்றால் அவர் கடந்த சீசன்களில் காயத்தால் அவதிப்பட்டார். ஆனால் இந்த ஆண்டு அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு முழங்கால் பிரச்சனை முன்பு போல் இல்லை அவரால் சரியாக நகர முடிகிறது. இருப்பினும் அவரது முழங்காலில் சிறிய தேய்மானம் உள்ளது. அவரால் பத்து ஓவர்கள் பந்து வீச்சில் முழுமையாக பேட்டிங் செய்ய முடியாது. அன்றைய தினம் அவரால் நமக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை அவர் மதிப்பிடுகிறார்.
இதையும் படிங்க:ருதுராஜ் செய்த ஏற்க முடியாத தப்பு.. பின்னணியில் இருப்பது தோனியா?.. சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்
இன்றைய போட்டியை போல சமநிலையில் இருந்தால் அவர் முன்னரே விளையாட முயற்சிப்பார். அல்லது மற்ற வீரர்களுக்கு ஆதரவு தரும் வகையில் அவர் தனது பேட்டிங் நிலையை தீர்மானிப்பார். நான் கடந்த ஆண்டு தோனி குறித்துக் கூறியிருக்கிறேன். தோனி மிகவும் மதிப்பு மிக்க ஒரு வீரர். அவரால் பத்து ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்ய முடியாது என்று. எனவே தோனி 13-14 ஓவர்களில் அணி எந்த நிலையில் உள்ளது. எதிரணியின் நிலைப்பாடு என்ன என்பதை பொருத்தே அவர் பேட்டிங் களம் இறங்குகிறார்” என்று பிளம்மிங் கூறியிருக்கிறார்.






