இங்கிலாந்தில் உள்ள லண்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.
தற்போது தென்னாபிரிக்கா வெற்றி இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தவறுகள் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச ஆரம்பித்த தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸ் முடிவில் 212 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. அதற்குப் பின்னர் தென் ஆப்பிரிக்கா 138 ரன்கள் தங்களது முதல் இன்னிங்ஸில் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஸ்டார்க்கின் சிறப்பான ஆட்டத்தால் தென்னாபிரிக்க அணிக்கு சவாலான ரன்களை நிர்ணயித்தது.
கிட்டத்தட்ட 280 ரன்கள் இலக்கை தென்னாபிரிக்க அணிக்கு நிர்ணயித்த நிலையில் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்னில் ரிக்கல்ட்டன் மற்றும் 27 ரன்னில் முல்டர் வெளியேறினாலும், பவுமா மற்றும் மார்க்ரம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றியை பெற முயற்சி கொண்டு இருக்கிறது. சிறப்பாக விளையாடிய மார்க்ரம் சதம் அடித்து 102 ரன் மற்றும் பவுமா 65 ரன்னில் களத்தில் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தவறுகள் குறித்து மேத்யூ ஹைடன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணி செய்த தவறு
இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “உங்களுக்குத் தெரியும், ஆஸ்திரேலியா அணியின் இந்த தற்காப்பு முயற்சி அவர்கள் விக்கெட்டுகளை எப்படி விரைவாக வீழ்த்தப் போகிறார்கள் எப்படி ஆரம்பத்தில் அவர்கள் இதை செய்யப் போகிறார்கள் என்பதை பற்றியதாகும். உங்களுக்குத் தெரியும், தென்னாப்பிரிக்க அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளை விரைவாக அவர்கள் வீழ்த்தினார்கள். அந்த நேரத்தில் அவர்கள் பவுமா மீது அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டி இருந்தது.
இதையும் படிங்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. வரலாற்று வெற்றி அருகே தென்னாப்பிரிக்கா.. டிவிஸ்ட் தருமா ஆஸ்திரேலியா?
அந்த சமயத்தில் அவர்கள் கேட்சிங் பகுதிகளை கவர் செய்ய வேண்டி இருந்தது. குறைவான தற்காப்புடன் அதிக தாக்குதலோடு செல்ல வேண்டி இருந்தது. அந்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தால் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளுடன் தடுமாற ஆரம்பித்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இந்த தந்திரத்தை ஆஸ்திரேலியா அணி மிஸ் செய்தது” என அவர் கூறியிருக்கிறார்






