டி20 உலக கோப்பையில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன பிரட்லீ மூன்று வடிவங்களிலும் தலைசிறந்த பந்துவீச்சாளரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கடைசியாக 2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் முதன்முறையாக டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி, அதற்குப் பிறகு தோனியே தலைமை தாங்கியபோதும் இந்தியாவால் டி20 உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. இருப்பினும் விராட் கோலி தலைமையிலும் இந்திய அணிக்கு ஏமாற்றமே அமைந்தது.
அதற்குப் பிறகு 2022ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் ஆன இந்திய அணி லீக் சுற்று வரை ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அப்போது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது பந்துவீச்சு. ஏனென்றால் அப்போதைய டி20 உலக கோப்பை அணியில் பும்ரா காயம் காரணமாக பங்கு பெறவில்லை.
அதன் பிறகு காயத்திலிருந்து மீண்டு வந்து அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் தனது முத்திரையை பதித்தார். அதன் பிறகு டி20 உலக கோப்பையிலும் முன்னர் இருந்ததை விட தற்போது எல்லா வகையான பந்து வீச்சிலும் பலம் பொருந்தியவராக திகழ்ந்தார். இதன் காரணமாகவே இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வெற்றி பெற்றுள்ளது.
பும்ராவின் பந்துவீச்சு டி20 உலக கோப்பையில் மட்டுமல்ல, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஐபிஎல் தொடரிலும் அவரது பந்துவீச்சை தவிர மற்ற அனைத்து பந்து வீச்சுக்களையும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன பிரட்லீ பும்ராவை மூன்று வடிவங்களிலும் தலைசிறந்த பந்துவீச்சாளராக தேர்ந்தெடுத்துள்ளார்.
இது குறித்து பிரட்லீ விரிவாக கூறும்பொழுது “எனது கருத்துப்படி பும்ரா விதிவிலக்கான பந்துவீச்சாளர். அவர் அனைத்து வகையான ஃபார்மேட் கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்கிறார். பும்ரா புதிய பந்தில் அற்புதமான வேகத்தை தொடர முடியும். களத்தில் அவரது செயல்பாடு பும்ராவின் தலைமைத்துவத்தை அற்புதமாக வெளிப்படுத்தியது. நல்ல பந்துவீச்சு எக்கானமியில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
இதையும் படிங்க:5 முறை அந்த தப்ப செஞ்சேன்.. 5 முறையும் ரோகித் என்னை தாண்டிச்சார்.. அங்கேயே முடிஞ்சிடுச்சு – மிட்சல் ஸ்டார்க் பேச்சு
பும்ரா ஒரு தனித்துவமான விதிவிலக்கான பந்துவீச்சாளர். இந்த டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணி தகுதியானது. டாப் பேட்ஸ்மேன்கள் முதல் கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் வரை இந்தியா பலம் பொருந்தியதாக உள்ளது. குறிப்பாக அதன் மிடில் வரிசை அசுரத்தனமான பலத்தில் உள்ளது. மேலும் ரன்களை விரைவாக அடிக்கக் கூடிய பவர் ஹிட்டர்களும் உள்ளனர்” என்று பிரட்லீ கூறி இருக்கிறார்.