வெஸ்ட் இண்டீசில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது சுற்றில் தோற்று அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதுகுறித்து பல விஷயங்களை மனம் திறந்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் பேசி வருகிறார்.
ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தங்கள் பிரிவில் இங்கிலாந்து அணிக்கு மேலே முதல் இடத்தை பிடித்து இரண்டாவது சுற்று முன்னேறியது. இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரண்டாவது சுற்றில் ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இருந்தது. இதற்கு அடுத்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தொடர்ந்து தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
மிக முக்கியமாக நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தது. எனவே இந்த டி20 உலக கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் போட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிட்சல் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்தார். மேலும் 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு ரோகித் சர்மாவின் பேட்டிங் மற்றும் மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சு இரண்டுமே காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க : பிசிசிஐ மீது ரோகித் சர்மா அதிருப்தி.. டிராவிட் வழியில் செல்ல முடிவு.. திடீர் மாற்றங்கள்
தற்போது இது குறித்து பேசி இருக்கும் மிட்சல் ஸ்டார்க் போகும் பொழுது “நான் ரோஹித் சர்மாவுக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். அவர் எனக்கு ஒரு சிறந்த போட்டியாளராக இருந்திருக்கிறார். நான் குறிப்பிட்ட அந்த போட்டியில் ஐந்து சுமாரான பந்துகளை வீசினேன். ரோகித் மிகச் சரியாக காற்று வீசும் திசையை குறி வைத்து அந்த ஐந்து பந்துகளையும் சிக்ஸர் அடித்து விட்டார். எங்கள் தோல்விக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.