இந்திய கிரிக்கெட்

மயங்க் யாதவுக்கு ஐபிஎல் தான் முக்கியம்.. டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கல – பிராட் ஹாக் விமர்சனம்

இந்திய அணியின் இளம் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் நீண்ட வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளராக டெல்லி மாநில அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காகவும் விளையாடும் இந்திய வீரர் மயங்க் யாதவ் இருக்கிறார். ஆனால் இவருக்கு காயம் ஒரு பிரச்சினையாக இருந்து வருவதால் இவரால் நீண்ட கிரிக்கெட் வடிவத்திற்கு இந்தியாவிற்காக விளையாட முடியவில்லை.

இங்கிலாந்து தொடரிலும் இடமில்லை

மயங்கி யாதவுக்கு உடலில் ஒரு பக்க காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அவர் பந்து வீசும் பொழுது உடலின் பக்கவாட்டில் ஒரு பக்கத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து சாய்ந்து வீசுகிறார். இதன் காரணமாக அவருக்கு அந்தப் பகுதியில் காயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர் அடிக்கடி காயமடைந்து விளையாட முடியாமல் போகிறது.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதிலும் மயங்க் யாதவ் காயத்தால் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து காயம் ஒரு பெரிய பின்னடைவை கொடுத்துக் கொண்டு வருகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்குத்தான் முக்கியத்துவம்

இதுகுறித்து பிராட் ஹாக் கூறும்பொழுது “மயங்க் யாதவ் தற்பொழுது காயம் அடைந்திருக்கிறார். அவர் எத்தனை முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்கிறார் என்று பார்த்தால் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி இருக்கிறார். அவர் நீண்ட வடிவ கிரிக்கெட்டில் அதிகம் விளையாடவில்லை. அவரைப் போலவே 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச ஆட்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் மயங்க் யாதவ் சுத்த வேகத்தை வைத்திருக்கிறார். ஆனால் இவர்கள் தங்களுக்கு ஐபிஎல் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள்”

இதையும் படிங்க : அடுத்த சச்சின் இங்கிலாந்தில் பிறந்திருக்கிறார்.. அவரை விட சிறப்பாக வருகிறார் – ஆஸி கிரேக் சேப்பல் கருத்து

“இவர்கள் ஐபிஎல் ஒப்பந்தத்தை பெற்றவுடன் எல்லாம் முடிவுக்கு வந்து விடுகிறது. இவர்கள் நீண்ட வடிவ கிரிக்கெட்டை எப்படி விளையாடுவது என்று கற்றுக் கொள்வதில்லை. அதில் உள்ள சவால்களை சமாளித்து அதற்கு தகுந்தபடி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு பந்து வீச இவர்களுக்கு தெரியவில்லை. அதற்கான சக்தியும் சகிப்புத்தன்மையும் இவர்களிடம் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts