அடுத்த சச்சின் இங்கிலாந்தில் பிறந்திருக்கிறார்.. அவரை விட சிறப்பாக வருகிறார் – ஆஸி கிரேக் சேப்பல் கருத்து

0
1980
Sachin

ஆஸ்திரேலியா லெஜன்ட் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் இங்கிலாந்தின் இளம் வீரர் ஒருவரை அடுத்த சச்சின் டெண்டுல்கர் என குறிப்பிட்டு அதற்கான காரணங்களை விளக்கியிருக்கிறார்.

கிரிக்கெட் உலகில் ஒப்பற்ற பேட்ஸ்மேனாக சச்சின் டெண்டுல்கர் இன்றளவும் சிறந்தவராக பார்க்கப்படுகிறார். அவருடைய பேட்டிங் தொழில்நுட்பமும் அவரிடம் இருந்த பேட்டிங் டைமிங்கும் இன்று வரையில் வேறு யாரிடமும் பார்க்க முடியாததாக இருக்கிறது. கண்கள் நம்ப முடியாத அளவுக்கு அவர் விளையாடிய ஷாட்கள், அவரது ஓய்வுக்குப் பிறகு மறைந்து விட்டது.

- Advertisement -

அடுத்த சச்சின் இந்தப் பையன்தான்

இதுகுறித்து கிரேக் சேப்பல் எழுதும் பொழுது ” இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கலம் இருவரும் சேர்ந்து தைரியமான அணுகு முறையை கொண்டு வந்து, அடுத்த ஒரு தலைமுறைக்கு ஆதிக்கம் செலுத்தக்கூடிய இங்கிலாந்து அணியை உருவாக்கி விட்டார்கள். இதில் முக்கிய விஷயமாக, இந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணமாக இளம் வீரர் ஹாரி புரூக் இருக்கிறார். அவருடைய அணுகுமுறை மற்றும் செயல் திறன் சச்சின் டெண்டுல்கர் உடன் ஒப்பிடும் அளவுக்கு இருக்கிறது”

“அதே சமயத்தில் நாம் ஹாரி புரூக்கின் ஆரம்பகால செயல்பாட்டு புள்ளி விவரங்களை பார்க்கும் பொழுது, அது இந்திய மேஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால செயல்பாட்டு புள்ளி விவரங்களை விட மிகவும் சிறப்பாக இருப்பதையும் பார்க்க முடியும்”

- Advertisement -

ஹாரி புரூக்கின் தொழில்நுட்பம்

“வெறும் 25 வயதில் உலகில் அதிகம் பேசப்படும் கிரிக்கெட் வீரராக புரூக் மாறிவிட்டார். அவரிடம் இருக்கும் பேட்டிங் தொழில்நுட்பம் எளிமையானது ஆனால் பெரிய அளவிற்கு எதிரணிக்கு சேதத்தை விளைவிக்க கூடியது. சச்சின் போலவே இவரும் ஆரம்ப காலகட்டத்தில் கிரீசில் அதிகம் நகரவில்லை. அவருடைய நிலைத்தன்மை மற்றும் குறைவான பேட்டிங் தொழில்நுட்பம் ஆகியவற்றால் பந்துவீச்சாளரின் கோணத்தை ரீட் செய்யவும், அவரது ஸ்ட்ரோக்குகளை சரியாகவும் துல்லியமாகவும் அமைக்கவும் உதவுகின்றன”

இதையும் படிங்க : ஜடேஜா நீக்கப்படலாம்.. காரணம் இந்த தமிழக வீரர்கள் தான் – ஆகாஷ் சோப்ரா அதிரடியான அறிவிப்பு

“புரூக்கிடம் பெரும்பாலான பந்துகளில் ஸ்கோர் செய்வதற்கான அசாதாரண திறமை இருக்கிறது. அது ஃபுல் பந்தாகவோ, ஷார்ட் பந்தாகவோ மேலும் ஆக்வேர்ட் லென்த்தில் இருந்தாலும் அவரால் ரன்கள் எடுக்க முடிகிறது. இது மிகவும் அசாதாரணமான ஒரு திறமை ஆகும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -