பும்ரா திரும்ப வந்தாலுமே பிரச்சனை மும்பை அணிக்குதான்.. அதற்கு இந்த விஷயமே முக்கிய காரணம் – ஆஸி முன்னாள் கேப்டன்

0
142

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது முதல் ஆட்டத்தில் விளையாட உள்ளன.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் மும்பை அணி வீரர் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

மும்பை வீரர் காயம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில் அதற்குப் பிறகு தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். ஒரே இடத்தில் அவருக்கு இரண்டாவதாக காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவரது உடல் தகுதியை மருத்துவக் குழு மிக தீவிரமான முறையில் கண்காணித்து வருகிறது. எனவே இதுபோன்று இன்னொரு சிக்கலில் பும்ரா மாட்டி விடக்கூடாது என்பதற்காக அவர் விளையாடும் போட்டியிலும் தகுந்த மாற்றங்களை பிசிசிஐ செய்யப் போகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரிலும் ஏப்ரல் முதல் வாரம் வரை பும்ரா விளையாடுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளிவரும் நிலையில் அதற்குப் பிறகு அவர் மும்பை அணியில் இணைந்தாலும் முன்பு போல அவரால் சிறப்பாக செயல்பட முடியுமா? கவலையாக இருக்கிறது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னால் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதை நினைத்தால் கவலையாக உள்ளது

இதுகுறித்து கிளார்க் விரிவாக கூறும்போது ” எனக்கு பும்ராவை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது. அவர் இன்னும் தனது போட்டியை விளையாட ஆரம்பிக்கவில்லை. அவரால் தனது முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவர் வித்தியாசமானவர், அவரால் ஐந்து விக்கட்டுகள் கூட ஒரு போட்டியில் எளிதாக எடுக்க முடியும். ஆனால் போட்டிகள் செல்ல செல்ல அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது.

இதையும் படிங்க:ஆர்சிபி கேப்டன் பெரிய சிக்கலில் இருக்கார்.. அவர் இதில் கோலியை எதிர்த்து போராடணும் – ராபின் உத்தப்பா

எனக்கு தெரியவில்லை பும்ரா இல்லை என்றால் மும்பை அணி ரொம்ப கஷ்டப்படும்” என்று மைக்கல் கிளார்க் கூறி இருக்கிறார். மேலும் மும்பை அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்த்தனா கூறும் போது பும்ராவின் மருத்துவக் குழு அறிக்கையை தினசரி கண்காணித்து வருவதாகவும் அவர் விரைவில் நலம் பெறுவார் என்றும் கூறுகிறார். உலகின் நம்பர் ஒன் வந்து வீச்சாளர் தற்போது மும்பை அணியை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் அது அந்த அணிக்கு சற்று சிக்கலை ஏற்படுத்துவது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் அவர் விரைவாக நலம் பெற்று மும்பை அணியில் விரைவாக இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -