ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தற்போது புதிய கேப்டனாக இந்திய இளம் வீரர் ராஜத் பட்டிதார் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் ராபின் முத்தப்பா பெங்களூர் கேப்டன் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பெங்களூர் அணியின் கேப்டன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியாக வருகிற சனிக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. ஆர்சிபி அணியின் நீண்ட கால கேப்டனாக இந்திய இளம் வீரர் ராஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் பெங்களூர் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆர்சிபி இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறது.
பட்டிதாருக்கு கேப்டனாக இதுவே முதல் அனுபவம் ஆகும். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இருந்தாலும் இது சர்வதேச பிரான்சிஸ் டி20 லீக் என்பதால் விராட் கோலி கேப்டன்ஷியை பட்டிதார் அதிகமாக சார்ந்து இருக்க வேண்டி இருக்கும் எனவும், விரைவில் தனது தனித்திறமையை அவர் வெளியே கொண்டு வர வேண்டும் என சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலியை எதிர்த்து போராட வேண்டும்
இதுகுறித்து அவர் கூறும் போது “ஆர்சிபிஅணியில் அருகிலேயே இருக்கும் விராட் கோலி எதிர்த்து தற்போதைய கேப்டன் போராட வேண்டி இருக்கும். அவர் விராட் கோலியின் கேப்டன்ஷிப் பெருமைகளை அதிகமாக சார்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் பெங்களூர் அணியை முன்நோக்கி எடுத்துச் செல்ல ராஜத் ஒரு தனித்துவமான மனநிலையில் இருப்பார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:ஐபிஎல்லில் நல்லா ஆடினாலும்.. ஸ்ரேயாசுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு தரக்கூடாது.. காரணம் இதுதான் – அஸ்வின் விளக்கம்
தற்போது ராஜத் பெங்களூரின் கேப்டனாக இருப்பதால் அவர் தனது தலைமைத்துவ முறையை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உள்நாட்டு கிரிக்கெட் பொருத்தவரை அவர் கேப்டனாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் ஆர்சிபி அணியை பொறுத்தவரை அவரது செயல் திறனில் அதை மாற்ற வேண்டும்” என்று உத்தப்பா கூறியிருக்கிறார். மேலும் பெங்களூர் அணி 17 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறாத நிலையில், இந்த முறை அதை வெல்ல வேண்டிய அழுத்தமும் பட்டிதாருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் போட்டியை வருகிற சனிக்கிழமை கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாட உள்ளது






