ஐபிஎல் 2024: கமெண்ட்ரி செய்ய போகும் இதுவரை ஓய்வை அறிவிக்காத 5 கிரிக்கெட் வீரர்கள்

0
156
Steve Smith and Hanuma Vihari

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கும் நிலையில், இதன் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா கைப்பற்றி இருக்கும் நிலையில், அதன் வர்ணனையாளர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற வீரர்களே வர்ணனையாளர் பணியினை தேர்வு செய்வார்கள். ஆனால் தற்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களே வர்ணனையாளர்களாக செயல்பட இருக்கின்றனர். தற்போது ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள செயலிகளின் வரவால் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப தனித்தனியான வர்ணனையாளர்களைத் தேர்வு செய்கிறார்கள். இதனால் வர்ணனையாளர்களின் தேவைகளும் தற்போது அதிகரித்து உள்ளது. எனவே வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்யப் போகும் வீரர்களைப் பற்றிக் காணலாம்

- Advertisement -

ஸ்டீவ் ஸ்மித்: ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் ஆங்கில வர்ணனையாளராக செயல்படப் போகிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள ஸ்மித் புனே அணியைக் கேப்டன் ஆகவும் வழி நடத்தியுள்ளார்.

கேதர் ஜாதவ்: இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் சென்னை அணிக்காக விளையாடி குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தவர். இவர் கடைசியாக 2023ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். தற்போது வர்ணனை குழுவில் இணைந்திருக்கும் இவர் ஜியோ சினிமாவில் மராத்தி வர்ணனையாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

ஷெல்டன் ஜாக்சன்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ஷெல்டன் ஜாக்சன் தற்போது ஐபிஎல் தொடர்களில் விளையாடவில்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இவர் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஜியோ சினிமாவில் குஜராத்தி வர்ணனையாளராக இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சச்சின் பேபி: சச்சின் பேபி பெயருக்காகவே சற்று பிரபலமான இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளில் இடம்பெற்று விளையாடி இருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த இவர் இந்த சீசனில் மலையாள வர்ணனையாளராக செயல்பட போகிறார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: சர்பராஸ் கான் அப்பா கூடவும் விளையாடி இருக்கேன்.. அவர் செம பேட்ஸ்மேன் – ரோகித் சர்மா வெளியிட்ட சுவாரசிய தகவல்

ஹனுமா விகாரி: டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட ஹனுமா விகாரி ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இடம் பெற்று விளையாடினார். இவர் வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் ஜியோ சினிமாவின் தெலுங்கு வர்ணனையாளராக இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.