சர்பராஸ் கான் அப்பா கூடவும் விளையாடி இருக்கேன்.. அவர் செம பேட்ஸ்மேன் – ரோகித் சர்மா வெளியிட்ட சுவாரசிய தகவல்

0
1311
Rohit

இங்கிலாந்து அணி சமீபத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து, அந்த டெஸ்ட் தொடரை 4-1 என மோசமாக விளையாடி தோற்று நாடு திரும்பி இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் வெற்றி இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி, கேஎல்.ராகுல், முகமது சமி போன்ற நட்சத்திர இந்திய வீரர்கள் விளையாடவில்லை. இந்த தொடரில் மட்டும் மொத்தம் ஐந்து இளம் இந்திய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். உள்நாட்டில் உலகக் கோப்பைக்குப் பிறகு நடைபெறுகின்ற பெரிய தொடர் என்றாலும் கூட, கேப்டன் ரோஹித் சர்மா தேர்வுக்குழுவுடன் இணைந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் உறுதியாகவும் தைரியமாகவும் இருந்தார்.

- Advertisement -

மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த போதும் கூட, கேப்டன் ரோகித் சர்மா சீனியர் வீரர்களிடம் செல்லாமல், தொடர்ந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் உறுதியாக இருந்ததோடு, அவர்களை களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மிகச் சிறப்பாக நடத்தி நம்பிக்கை கொடுத்து, தொடரையும் மிகப்பெரிய அளவில் வென்று கேப்டனாக மட்டுமில்லாமல் பேட்ஸ்மேன் ஆகவும் சாதித்திருந்தார்.

ரோகித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி இங்கிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது, இந்திய கிரிக்கெட் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை காட்டும் குறியீடாக அமைந்திருக்கிறது. எனவே இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறது. எனவே டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டிக்கான கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி ஆச்சரியப்படுத்தியும் இருந்தது.

என்னை நான் தொலைத்து விட்டேன்

இங்கிலாந்து தொடர் குறித்தும், இளம் வீரர்கள் குறித்தும் பேசி உள்ள கேப்டன் ரோகித் சர்மா ” தனிப்பட்ட முறையில் நான் இளம் வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை மிகவும் விரும்பினேன். அவர்கள் அனைவரும் மிகவும் குறும்புக்காரர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் திறமையானவர்கள் மற்றும் அவர்களுடைய பலம் என்ன? அவர்கள் எப்படி விளையாட விரும்புகிறார்கள் என்பது குறித்து நான் தெரிந்து வைத்திருந்தேன். அவர்களுக்கு கடந்த காலத்தில் நடந்த நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லி நம்பிக்கை அளிப்பதுதான் என்னுடைய பொறுப்பு. அவர்கள் எனக்கு சிறந்த திறமையாக செயல்பட்டு பதில் அளித்தார்கள். பயிற்சியாளராக டிராவிட் பாயும் சிறப்பாக இருந்தார்.

- Advertisement -

இந்தப் பையகளின் எல்லோரது அறிமுகத்திலும் நான் தொலைந்து விட்டேன். அவர்கள் பெற்றோர்களும் அங்கே இருந்தார்கள். எனவே அது உணர்ச்சிகரமான சூழ்நிலையாக இருந்தது. அவர்களின் அறிமுகத்தை நான் ரசித்தேன். அதில் என்னை நான் தொலைத்து விட்டேன். பெற்றோர்கள் இருந்த காரணத்தினால் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. மேலும் நான் சர்ப்ராஸ் கான் அப்பாவுடன் கங்கா லீக்கில் விளையாடுகிறேன்.

இதையும் படிங்க: 2024 ஐபிஎல் : சிஎஸ்கே ஆர்சிபி அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள்.. முழு அலசல்

சர்ப்ராஸ் கான் அப்பா இடது கை பேட்ஸ்மேன். அவர் நல்ல ஆக்ரோஷமான அதிரடி வீரர். மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவர். அவரது கடுமையான முயற்சி மற்றும் உழைப்பின் மூலம் இந்திய அணிக்கு கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டு மதிப்பளிக்க விரும்பினேன். அவர் மகனுடைய டெஸ்ட் தொப்பி அவருக்கும் சொந்தமானதுதான்” என்று கூறி இருக்கிறார்.