2024 டி20 உலககோப்பை.. கவனிக்க வேண்டிய 5 முக்கியமான கலக்கல் பேட்ஸ்மேன்கள்

0
2880
T20iwc2024

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் இரண்டாம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய பேட்ஸ்மேன்கள் பற்றி இந்த சிறிய கட்டுரைத் தொகுப்பில் பார்ப்போம்.

பில் சால்ட் : கடந்த வருடத்தில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டிஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பில் சால்ட் 2 சதங்கள் அடித்து அசத்தினார். இதன் காரணமாக கொல்கத்தா அணியில் ஐபிஎல் தொடரில் இடம் பிடித்து, அந்த அணிக்கு 400 க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

பிரண்டன் கிங் : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் இவர் கவனம் ஈர்க்காவிட்டாலும் கூட, வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் விளையாடும் பொழுது மிக ஆபத்தான வீரராக இருக்கிறார். தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை வெல்வதற்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார். மேல் வரிசையில் தேவைக்கு தகுந்தபடி விளையாடக்கூடிய இவர் ஆபத்தான பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார்.

முகமது ரிஸ்வான் : பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான இவர் டி20 கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் பில்டப் செய்து கடைசி வரை விளையாடுவதில் வல்லவர். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் பெரும்பாலும் மெதுவாகவும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். இந்த காரணத்தால் இவர் தன்னுடைய இயல்பான பேட்டிங் மூலம் துவக்க ஆட்டக்காரராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

டெவோன் கான்வே : மெதுவான மற்றும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடக்கூடிய வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் இவர் முக்கியமானவர். இதன் காரணமாக இவர் நியூசிலாந்து அணிக்கு பேட்டிங் மூலம் சிறப்பான பங்களிப்பை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க: பும்ரா மட்டும்தான் சரியா இருக்கார்.. மற்ற யாருமே இந்த வேலையை செய்யறது கிடையாது – பிரெட் லீ வருத்தம்

விராட் கோலி : 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஆரம்பித்து அந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் என விராட் கோலி அசுர பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். ஆட்டத்தை கடைசி வரை ஒருவர் நின்று எடுத்துச் செல்ல வேண்டிய தேவை வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் இருப்பதால், இவர் இந்த சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானவராக காணப்படுகிறார். எனவே மிக அதிகபட்ச எதிர்பார்ப்பு இவர் மீதுதான் இருக்கிறது!