பும்ரா மட்டும்தான் சரியா இருக்கார்.. மற்ற யாருமே இந்த வேலையை செய்யறது கிடையாது – பிரெட் லீ வருத்தம்

0
71
Bumrah

டி20 கிரிக்கெட் உலக கிரிக்கெட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வடிவமாக இருக்கிறது. மேலும் வணிகரீதியாக டி20 கிரிக்கெட் பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், இதுவரை கிரிக்கெட் நுழையாத நாடுகளுக்கும் டி20 கிரிக்கெட் நுழைந்து இருக்கிறது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டுக்குள்ளும் மாற்றங்கள் செய்ய வேண்டியது பற்றி பிரெட் லீ பேசியிருக்கிறார்.

ஐசிசி 2007 ஆம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது. தற்பொழுது ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் நடத்துகிறது. இந்த முறை 20 நாடுகள் பங்கு பெறுகின்றன.

- Advertisement -

டி20 கிரிக்கெட் அதிரடி வடிவமாக இருந்த போதிலும் கூட ஓரளவுக்கு பந்துவீச்சாளர்களுக்கு மரியாதை இருந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரையில், டி20 கிரிக்கெட்டை அணி நிர்வாகங்கள் அணுகும் முறையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்கவில்லை. ஆனால் தற்பொழுது இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் இம்பேக்ட் பிளேயர் விதியை தாண்டி வீரர்கள் விளையாடும் விதத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பந்துவீச்சாளர்கள் பெரிய சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து பேசி இருக்கும் பிரெட்லீ கூறும் பொழுது “பொதுவாக பும்ராவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் அதிகப்படியாக யார்க்கரை வீசுவது கிடையாது. வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக யார்க்கர் வீசுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் அவர்கள் கடைசிக் கட்டத்தில் யார்க்கரை நம்பி வீசுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

- Advertisement -

ஐபிஎல் தொடரை 17 வருடங்களாக நீங்கள் திரும்பிப் பார்த்தால் யார்க்கர் பந்தில் பேட்ஸ்மேன் ஒரு ரன் எடுக்கிறார் இல்லை ரன்கள் எடுப்பதில்லை. எனவே அதிகபட்சமாக அந்த குறிப்பிட்ட ஒரு பந்தில் 100 ஸ்டிரைக் ரேட் மட்டுமே இருக்கிறது. அதற்கு மேல் அந்த பந்தில் ரன்கள் போவதில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது.. மேக்ஸ்வெல்ல தப்பா கணக்கு போடாதிங்க – கவாஜா பேட்டி

இப்போது நீங்கள் யார்ர்க்கர் வீசும் பொழுது நன்றாக குனிந்து அவர்களது தலைக்கு மேல் ஸ்கூப் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் வந்து விட்டார்கள். எனவே இது பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு கொண்டு செல்கிறது. ஆனால் நீங்கள் யார்க்கர் வீசும் பொழுது அதற்கேற்றவாறு பின்பகுதியில் இரண்டு பீல்டர்களை நிறுத்தி பந்து வீச வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -