140 கிமீ வேகம்.. அசுதோஸ் சர்மா அடித்த ஸ்பெஷல் ஸ்வீப் ஷாட் சிக்ஸ்.. பந்துவீசிய பும்ராவே பாராட்டு

0
381
Bumrah

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஸ் சர்மா இருவரும் எதிர்பார்க்காத வகையில் பேட்டிங் யூனிட்டில் மிகப்பெரிய பலமாக மாறி இருக்கிறார்கள். இன்று தனி ஒரு வீரராக அசுதோஸ் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய பயத்தை காட்டினார். பும்ரா பந்துவீச்சில் பயமே இல்லாமல் அவர் விளையாடியது பலரையும் கவர்ந்திருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் மணிக்கு சூரியகுமார் யாதவ் 53 பந்தில் 78 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் 200 ரன்களை நோக்கி சென்று, இறுதியாக 192 ரன்கள் மட்டுமே ஏழு விக்கெட் இழப்புக்கு எடுக்க முடிந்தது. சூரியகுமார் தவிர மற்றவர்கள் எதிர்பார்த்து அளவுக்கு அதிரடியாக விளையாடவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் மூன்று ஓவர்களிலேயே 14 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து விளையாடிய அந்த அணி, 111 ரன்கள் எடுக்கும் பொழுது ஷஷாங்க் சிங் விக்கெட்டையும் இழந்து, அந்த நேரத்தில் மொத்தம் ஏழு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.

இந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்த இளம் வீரர் அசுதோஸ் சர்மா சந்தித்த முதல் 10 பந்துகளிலேயே மூன்று சிக்ஸர்களை அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் மொத்தம் 28 பந்துகளை மட்டும் சந்தித்து, இரண்டு பவுண்டரி மட்டும் அடித்து, ஏழு சிக்ஸர்களை விளாசி 61 ரன்கள் குவித்து துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டியதாக அமைந்துவிட்டது.

இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ராவின் பந்துவீச்சு அசாத்தியமாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட பும்ராவின் 140 கிலோ மீட்டர் வேக யார்க்கர் பந்து ஒன்றை, முன்கூட்டியே லோ புல்டாஸ் ஆக, முட்டி போட்டு சந்தித்து, அசுதோஸ் சர்மா ஸ்வீப் ஷாட் ஆடி பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார். பும்ரா மாதிரியான ஒரு பந்துவீச்சாளரை, அதுவும் இந்த வகையான ஷாட்டில் சிக்ஸர் அடிப்பது என்பது பெரிய விஷயம்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் என் டீம் பவுலர்களுக்கு ஐடியா சொல்லுவேன்.. ஆனா அவங்க அதை விரும்பனுமே – பும்ரா பேட்டி

பிறகு அசுதோஸ் சர்மா போட்டி முடிந்து மைதானத்தில் இருந்த பொழுது, அவரிடம் பேசிய பும்ரா அவரது பேட்டிங் குறித்து அவரை தட்டிக் கொடுத்து பாராட்டினார். இதே போல் இந்தப் போட்டியில் 25 பந்தில் 41 ரன்கள் எடுத்த ஷஷாங்க் சிங் விக்கெட்டை பும்ரா கைப்பற்றிய பொழுதும், அவரை தட்டிக் கொடுத்து பாராட்டி அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.