இந்திய அணியில் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படாததும், வெற்றியை விட அனைத்து தற்பொழுது என்ன முக்கிய தேவையாக இருக்கிறது என்பது குறித்தும் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசியிருக்கிறார்.
நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி குயின்ஸ்லாந்து மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மீண்டும் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா? என்பது குறித்தான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.
குறித்து மோர்னே மோர்கல் பேசும் பொழுது ” எங்களுடைய அணி தேர்வு குறித்து வீரர்களுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு ஏமாற்றம் இருக்கவே செய்யும். எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் வீரர்களை கடினமாக உழைக்கவும், பயிற்சி செய்யவும், வாய்ப்பு கிடைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளவும் கூறியிருக்கிறோம். டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக போட்டிகள் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே இதில் அழுத்தத்தின் கீழ் வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்” என்று பார்ப்பது முக்கியம்.
“அர்ஸ்தீப் அனுபவம் வாய்ந்தவர். நாங்கள் காம்பினேஷன் கண்டுபிடிக்கும் முயற்சி செய்வதால்தான் அவரை வெளியில் வைத்திருக்கிறோம் என்று அவர் புரிந்து கொள்வார். அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் பவர் பிளேவில் எங்களுக்கு அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவர் அணிக்கு எவ்வளவு மதிப்பு மிக்கவர் என்பது எங்களுக்கு தெரியும்”
“தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் அவர் எங்களுக்கு மூன்று துறைகளிலும் தேவையானதை செய்திருக்கிறார். அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து இனி அவர் பற்றியான மதிப்பீடுகளில் இருந்துதான் தெரிந்து கொள்ள முடியும்”
இதையும் படிங்க : ஆஸி 4வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. மாஸ் ப்ளூ பிரிண்ட்.. கம்பீர் இதை மட்டும் செய்யக்கூடாது
“டி20 உலக கோப்பைக்கு முன்பாக தொடர் வெற்றியை விட சரியான காம்பினேஷனை கண்டுபிடிப்பதுதான் முக்கியமானது. உங்களிடம் நிறைய விருப்பங்கள் இருக்கலாம். நீங்கள் எதையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும். நாம் முன்பே இதையெல்லாம் முயற்சி செய்து பார்த்திருக்கலாம் என்று நடந்த பிறகு சொல்ல முடியாது. இது புத்திசாலித்தனமாக விளையாடுவது பற்றியது” என்று கூறியிருக்கிறார்.