ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 52 பந்தில் இரட்டை சதம் விளாசி உலக சாதனை படைத்து ஆட்ட நாயகன் விருது வென்ற வைபவ் சூர்யவன்ஷி தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சி அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து வைபவ் சூர்யவன்ஷி பேசும்போது “கடந்த இரண்டு போட்டிகளில் செட்டானாலும் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. அதனால் தொடக்கத்தில் நிதானமாக நேரமெடுத்து ஆடுவதே திட்டமாக இருந்தது. ஆனால் ஒன்று அல்லது இரண்டு பந்துகளை எதிர்கொண்ட பிறகு, பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் பெரிய உதவி கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தேன், அதனால் எனது பலத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆடினேன்”
“பேட்டிங் செய்யும்போது மனதில் குறிப்பாக எதுவும் இல்லை. விக்கெட் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருந்தால் நேரமெடுத்து நீண்ட இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பதே ஒரே எண்ணமாக இருந்தது. ஆனால் நல்ல வேளையாக அப்படி இல்லை. விக்கெட் நன்றாக இருந்தது, பந்து பேட்டிற்குச் சுலபமாக வந்தது, அதனால் எனது ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தேன்” என்று கூறி இருக்கிறார்”
மேலும் இதுகுறித்து வைபவ் சூர்யவன்ஷி பேசும்போது “போட்டியில் நுழையும்போது இருந்த மனநிலை குறித்துச் சொல்ல வேண்டுமென்றால், புதிதாக எதுவும் இல்லை சார். நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற அதே மனநிலையில்தான் இருந்தேன். ஆட்டம் தொடக்கத்தில் எனது கட்டுப்பாட்டில் இல்லையென்றால் நேரமெடுக்க நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாகத் தொடக்கத்திலேயே கட்டுப்பாட்டைப் பிடித்துவிட்டேன், பிறகு எனது விருப்பப்படி ஆட்டத்தை நகர்த்தினேன்”
“பயிற்சியாளர்களின் ஆலோசனைகள் குறித்துப் பேசுகையில், ரிஷி சார் உதாரணமாக ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் ஒரே விஷயத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பார். அண்டர்-19 காலத்திலிருந்தே இதைச் சொல்லி வருகிறார். பந்தைச் சரியாகப் பார்த்தாலே ஆட்டம் எனக்கு எளிதாக இருக்கும் என்று கூறுவார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங் செய்வது பிடிக்குமா என்ற கேள்விக்கு, நன்றாக இருக்கிறது. ஆட்டத்தில் எனது ஃப்ளோ மீண்டும் கிடைத்திருக்கிறது, அதனால் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலும் இதைத் தொடர முயற்சிப்பேன். அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என நம்புகிறேன், அதே ஃப்ளோவிலும் எனது பாணியிலும் தொடர்ந்து ஆட முடியும். பேட்டிங் செய்யும்போது பிரஷர் வருமா என்று கேட்டால், நிச்சயமாக சார், எப்போதும் வரும். கொஞ்சம் பிரஷர் இருக்கத்தான் செய்யும். சற்று பதற்றமாக உணர்வது இயல்பு, அது மனித இயல்புதான். ஆனால் இரண்டு அல்லது நான்கு பந்துகளுக்குப் பிறகு நான் செட்டாகி சாதாரண நிலைக்கு வந்துவிடுவேன்” என்று கூறி இருக்கிறார்.