ஆஸி 4வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. மாஸ் ப்ளூ பிரிண்ட்.. கம்பீர் இதை மட்டும் செய்யக்கூடாது

0
158

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை குயின்ஸ்லாந்து மைதானத்தில் நடைபெற இருக்கும் நான்காவது டி20 போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்று பார்க்கலாம்.

தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்தாக, மற்ற இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் தற்போது சமநிலையில் இருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளையும் வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிக்கிக்கொண்ட கம்பீர்

இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் 3 பிரதான வேகப்பந்து வீச்சாளர்களை பிளேயிங் லெவனில் வைப்பதில்லை என்கின்ற உறுதியான முடிவில் இருக்கிறார். மூன்று ஸ்பின்னர்களை வைப்பது மட்டுமே அவருடைய திட்டமாக இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மூன்று ஸ்பின்னர்கள் விளையாட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதன் காரணமாக மூன்றாவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை களம் இறக்கினார். அவர் ஆல்ரவுண்டர் என்பதால், ஹர்ஷித் ராணா எட்டாவது இடத்தில் தேவைப்படவில்லை. எனவே இந்த இடத்திற்கு அர்ஸ்தீப் சிங் சேர்க்கப்பட இந்திய பிளேயிங் லெவல் சிறப்பானதாக மாறிவிட்டது. எனவே தற்போது வேறு எந்த மாற்றத்தையும் செய்ய முடியாத நிலையில் கம்பீர் இருக்கிறார்.

- Advertisement -

பரிசோதனைகள் போதும்

மேலும் சஞ்சு சாம்சன் இடத்தில் ஜிதேஷ் சர்மாவை கொண்டு வந்து விட்டதால், இப்போது பேட்டிங் ஆர்டரில் யாருக்கு என்ன இடம் என்பது தெளிவாகிவிட்டது. அடுத்து தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் சிவம் துபே இடத்தில் ஹர்திக் பாண்டியா வந்தால் எல்லாம் செட் ஆகி விடும். இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் கம்பீர் மீண்டும் ஹர்ஷித் ராணாவை கொண்டு வரக்கூடாது. இதுதான் இந்திய ரசிகர்களிடம் பெரிய சந்தேகமாக இருக்கிறது.

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் அவரை விட பெஸ்ட்.. இந்திய அணி இதை ஏன் செய்யுதுன்னு புரியல – ஆஸி வீரர் குழப்பம்

இந்திய பிளேயிங் XI : அபிஷேக் ஷர்மா, கில், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.

- Advertisement -