ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூரியவன்சி வெறும் 53 பந்தில் 24 ரன்கள் குவித்து உலகச் சாதனை படைத்தார். இதுகுறித்து வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் திலக் வர்மா பேசியிருக்கிறார்.
இதுகுறித்து திலக் வர்மா பேசும்போது “வைபவ் சூரியவன்சி ஆட்டத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அது முற்றிலும் அழிவுகரமான ஆட்டம். அவர் பேட்டிங் செய்த விதத்தால் முதல் ஐந்து ஓவர்களில் நூறு ரன்கள் எடுத்தபோதே போட்டி முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகும் அவர் தொடர்ந்த விதம் பார்க்க பிரமிப்பாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இதுகுறித்து திலக் வர்மா பேசும்போது “நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் சொல்வதற்கு அதிகம் இல்லை. அவர் எவ்வளவு நன்றாக சிக்ஸர்கள் அடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தொடர்ந்து அடித்தபோது டக் அவுட்டில் இருந்த அனைவரும் மேலும் அடி மேலும் அடி என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். பந்து எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்லும்போது அது ஃபோரா என்று கூட யாரும் பார்க்கவில்லை, அனைவரும் சிக்ஸ் அடித்தாரா என்றுதான் கேட்டனர். அது மிகச்சிறந்த இன்னிங்ஸ், நான் பார்த்தவற்றில் ஒன்று” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இதுகுறித்து திலக் வர்மா பேசும்போது “அர்ஷத் கான் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். முதல் போட்டியில் வந்து இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவது நமக்கு மிக முக்கியம். வரும் போட்டிகளிலும் இந்த தன்னம்பிக்கையை அவர் கொண்டு செல்வார் என நம்புகிறேன். பிட்ச் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருந்தது, ஆனால் அவர் பவுன்சர்களை அற்புதமாகப் பயன்படுத்தி லைன் மற்றும் லெந்தை மாற்றி வீசினார். மிகவும் துல்லியமாக இருந்தார், அந்த முயற்சிக்கு அவருக்குத்தான் பாராட்டு சேர வேண்டும்”
“பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்த முடிவு குறித்துப் பேசுகையில், எனது இடது பக்கத்தில் சற்று இறுக்கமாக இருந்தது, எனவே அரையிறுதிக்கு முன் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை. ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் இழப்பில் இலக்கை எட்டுவோம் என எதிர்பார்த்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அபிஷேக் சீக்கிரம் அவுட்டாகிவிட்டார்” என்று கூறி இருக்கிறார்.