தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற்று வரும் ரைசிங் ஸ்டார் ஆசியா கப் தொடரில் யுஏஇ அமுக்கி எதிரான போட்டியில் வைபவ் சூரியவன்சி அதிரடியால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வெற்ற யுஏஇ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு ஹர்ப்ரித் சிங் 144 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 130 ரன்கள் எடுத்தார். அந்த அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அர்ஷத் கான் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 12, பிரப்சிம்ரன் சிங் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இன்னொரு முனையில் அதிரடி காட்டிய வைபவ் சூரியவன்சி 15 பந்தில் அரை சதம் அடித்தார்.
இதற்கு அடுத்து ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்து 28 பந்தில் சதம் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதமாக இது பதிவாகியது. இதைத்தொடர்ந்து 40 பந்துகளை சந்தித்து 150 ரன்கள் தாண்டினார். இந்த வகையில் இதுவும் உலக சாதனையாக மாறியது.
மேலும் தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 52 பந்தில் இரட்டை சதத்தை அடித்தார். இது அதிவேக இரட்டை சதமாக உலக சாதனையாக பதிவாகியது. இறுதியாக 53 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 28 சிக்ஸர்களுடன் 204 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர் ஆகவும் உலக சாதனை படைத்தார்.
இந்திய அணி 14.2 ஓவரில் 250 ரன்கள் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 250 ரன்கள் மிக வேகமாக துரத்திப் பிடித்து இந்திய அணியும் தனிப்பட்ட உலக சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. 15 வயதான வைபவ் சூரியவன்சியின் ஆட்டத்தை பார்த்து உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியத்தையும் பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள்.